* மரத்தின் பெயர் : பனை மரம்
* தாவரவியல் பெயர் : போராசசு அத்தியோபம்
* ஆங்கில பெயர் : Palm Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : அரக்கேசி
பொதுப்பண்புகள் :
* பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம்.
* பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.
* இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
* பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது.
* இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30-40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
* பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
* மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும்.
* இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.
பயன்கள் :
* பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர் அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய குளிர்ச்சியான பானமாகும். இந்தப் பதனீர் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது; உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது. எலும்புகளையும், கல்லீரலையும் பலப்படுத்துகிறது.
* பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம்.
* இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது.
* கருப்பட்டி உடலுக்கு சுறு சுறுப்பை ஏற்படுத்தி மந்த தன்மையை போக்குகிறது.
* பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
* பனை மரத்தின் பாகங்கள் மருத்துவத்துக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருட்களாகவும் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்தார்கள்.
* பனை ஓலையில் பாய், பெட்டி, கூடைகள் முடைந்தார்கள். வீடுகளுக்குக் கூரை வேய பயன்படுகிறது.
* ஓலையை மடக்கி பட்டை செய்ய பயன்படுகிறது.
* பனைமர மட்டைகள் வீடு கட்டவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுகிறது.
* மட்டையில் இருந்து நார் எடுத்து கயிறாகிறது. நாரை கட்டில் கட்டவும், பனை மரத்தின் கட்டிலின் சட்டங்களாகவும் செய்யவும் பயன்படுகிறது.
* பனை மரத்தின் குருத்தோலைகளை வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கும் தோரணங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.
* இன்றும் விசிறிகள், தொப்பிகள், கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* நேரடி விதைப்பிற்கு 3 x 3 மீட்டர் இடைவெளியில் குழிகள் தோன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 400 குழிகள் வரை எடுக்கலாம். குழியானது 20x20x20 செ.மீட்டர் அளவில் இருக்க வேண்டும்.
* முதிர்ந்த பனம் பழத்திலிருந்து எடுக்கப்பட்டு மூன்று வாரம் நிழலில் சேமிக்கப்பட்ட பனங்கொட்டைகளை குழிக்கு 3 முதல் 4 வரை போட்டு இலைச்சருகுகளை கொண்டு மூட வேண்டும்.
* நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டு முதல் மூன்று வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. பனை மரம் பொதுவாக மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது.
* தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழிவரை நிரப்ப வேண்டும். பின்பு வருடாவருடம் எரு போட்டால் வளர்ச்சி சீராக இருக்கும்.
* மூன்று வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். ஆறு வாரங்களில் முளைப்பு முடிந்து விடும். ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை களைத்து விட வேண்டும்.
* பனைமரம் மெதுவாக தான் வளரும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து சுமார் 12 முதல் 13 மீட்டர் உயரம் வளர்த்தப்பின் தான் பாளை விட்டு பதனீர் கொடுக்கும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இந்த மரத்தில் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.
கருத்துகள் இல்லை