* மரத்தின் பெயர் : மாகோனி மரம்

             * ஆங்கில பெயர் : Mahogany Tree

             * தாயகம் : மேற்கிந்திய தீவு

             * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்

             * தாவர குடும்பம் : மீலியேசி

பொதுப்பண்புகள் :

              * மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட மகோகனி மரம்.

              * மீலியேசி எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி மரம்.

              * மகோகனி மரம் அதிகமாக நிழல் விழாத மரங்களில் ஒன்றாகும்.

              * மகோகனி மரம் ஏப்ரல் மாதத்தில் பூ பூக்கிறது. இந்தபூக்கள் பச்சை சாயலையுடைய மஞ்சள் நிறமானவை.

              * மகோகனி மரத்தின் கனி நீள உருண்டை வடிவத்தில் கட்டையை போன்று தோற்ற முடையதாக இருக்கும்.

             * மகோகனி மரத்தின் காய்கள் வானத்தை நோக்கியிருக்கும், இவை 7 செ.மீ. X 5.5 செ.மீ. அளவுடையவை.

             * மரத்தின் விதையின் உள்பகுதியில் 5 அறை இருக்கும். விதைகனி நெற்று வெடித்து விதைகள் சிதறி பறக்கும்.

பயன்கள் :

              * அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுகிறது.

              * மகோகனி மரம் எல்லா வேலைபாடுகளுக்கும் பயன்படுகிறது. குறிப்பாக மேஜை, நாற்காலிகள், அலமாரி மற்றும் கடைசல் வேலைப்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.

             * இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்.

            * நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகோகனி மரங்களை நடலாம்.

            * இசைக்கருவிகள், விமானத்தின் ஒட்டு பலகைகள், பென்சில் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

           * உதாரணமாக, தேக்கு, செம்மரங்கள், மகோகனி போன்ற மரங்கள் மரச்சாமான்கள் செய்ய உதவக் கூடியவைகளாக உள்ளன.

           * மகோகனி மரம் அதிகமாக கப்பல் கட்டும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பலன்தரும் மகோகனி மரம் பற்றாக்குறையால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது.

           * ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும். விவசாயமும் செழிக்கும்.

வளர்ப்பு முறைகள் :

              * 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தி அமைக்க வேண்டும். கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாய்பாத்தியின் மீது வேம்பு பால் கரைசலை நன்றாக தெளிக்க வேண்டும்.

              * ஒரு அங்குல கனத்தில் குறு மணலை தாய்பாத்தியின் மீது பரப்ப வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட குமிழ் விதைகளை ஒரு தாய்பாத்திக்கு 5 கிலோவீதம் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விதைக்க வேண்டும்.

              * விதையின் கனத்திற்கு சலித்த செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை தாய்பாத்தியின் மீது தூவி விடவேண்டும். அதன் பின்பு தாய்பாத்தியின் மீது வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி விடவேண்டும்.

              * தாய்பாத்தியின் மீது 15 நாட்களுக்கு பூவாளி மூலம் காலை மாலை இரு வேளை நீர்ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு பூவாளி மூலம் தினமும் ஒரு வேளை நீர் ஊற்ற வேண்டும். குமிழ்விதைகள் 10-12 நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். இந்நிலையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றுகளை தாய்பாத்தியிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

             * செம்மண், வண்டல் மண், மணல் மற்று நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியாக சல்லடையில் சலித்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதனோடு 1 பாலித்தீன் பைக்கு (13X25) செ.மீ அல்லது (16X30) செ.மீ. அளவு பாலீத்தின் பைகளில் 6 கிராம் அசோஸ்பைரில்லம், 6 கிராம் பாஸ்போ பேக்டீரியம், 15 கிராம் வேம்பு மற்றும் 35 கிராம் அளவிற்கு மண்புழு உரத்தை நன்கு கலந்துவிடவேண்டும்.

            * இம்மண் கலவையை (13X25) செ.மீ. அளவுள்ள பாலீத்தின் பைகள் அல்லது (13X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். நாற்றங்காலில் கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு பாலை நன்கு தெளிக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * நாற்றங்காலிலுள்ள நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி, புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் நாற்றுகளின் தளிர்களையும், இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்களான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

             * மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை மற்றும் வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

             * நாற்றங்காலில் நீர்தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும்பட்சத்தில் நாற்றுகளுக்கு வாடல் நோய் மற்றும் அழுகல் நோய் உண்டாகும். இந்நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகாவ்ய கரைசலை மண்ணின் வேர்பகுதிக்கு அருகே ஊற்ற வேண்டும்.

மாகோனி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை