* மரத்தின் பெயர் : வன்னி மரம்

            * தாவரவியல் பெயர் : ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா

            * ஆங்கில பெயர் : Khejri Tree

            * தாயகம் : இந்தியா

            * மண் வகை : களர் மண்ணில் வளரும் மரங்கள்

            * தாவர குடும்பம் : பபேசியே

பொதுப்பண்புகள் :

             * வன்னி மரம் இந்தியா, அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

            * இந்தியாவில் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத், உத்திரப் பிரதேசம் மற்றும் தென்னகத்தின் வறண்ட பகுதிகளிலும் இந்த மரம் வளர்கின்றது.

            * ஆண்டுக்கு 500 மில்லி மீட்டருக்கும் குறைவாக மழையுள்ள இடங்களிலும் இது வளரும் தன்மையுடையது.

            * வறண்ட, பாலைவனப் பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும்.

           * வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா ஆகும். இதனுடைய தாவரக் குடும்பம் மைமோசேசியே.

           * பாலை நிலைத்து மணலிலே வளர்ந்து மிகுந்த ஆழத்திலுள்ள ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு வாழும்.

           * வன்னி மரத்தை நம் இந்திய அரசு அஞ்சல் தலையில் வெளியிட்டு இந்த மரத்திற்குப் பெருமை சேர்த்தது.

           * வன்னி மரத்தின் பெருமை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனைத் தல விருட்சமாக எண்ணற்ற கோவில்களில் வளர்த்துப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

           * முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது.

           * வன்னி மரங்கள் பொதுவாக கரிசல் நிலங்களில் வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும்.

பயன்கள் :

             * மரம் முழுவதும் மருத்துவக் குணமுடையது.

             * வன்னிமரத்தின் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும்.

             * வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும்.

             * வன்னிமரத்தின் மரப்பட்டை விஷக்கடியை முறிக்கும் தசைப்பிடிப்பு மூல வியாதியைப் போக்கும்.

             * வன்னி மரத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.

            * வன்னி மர இலையும் பழங்களும் நரம்புத்தளர்ச்சியை நீக்கும்.

            * வன்னிமரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும்.

            * வன்னி இலைகளை அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போடலாம்.

            * வன்னி இலைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும்.

            * மரம் கட்டிடம் கட்ட உதவுகிறது. மேலும் விறகாகவும் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

               * மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

               * ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

              * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.

             * 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

             * செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.

             * இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் :

             * இதில் நோய் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.

             * கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

வன்னி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை