* மரத்தின் பெயர் : ஏழிலைப்பாலை மரம்
* தாவரவியல் பெயர் : அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ்
* ஆங்கில பெயர் : Blackboard tree, Devil tree, Shaitan tree
* தாயகம் : இந்தியா மற்றும் தென்கிழக்காசியா
* மண் வகை : செம்மண், கரிசல் மண் மற்றும் களிமண்ணில் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : அபோசைனேசியே
* மற்ற பெயர்கள் : ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை
பொதுப்பண்புகள் :
* ஏழிலைப்பாலை மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
* இதன் இலைகள் ஏழு ஏழாய் இருப்பதால் இதற்கு ஏழிலைப்பாலை என பெயர் வந்தது.
* இந்த மரம் நீண்டு வளரக்கூடியது.
* மரத்தினைப் பார்க்கும் போது கூம்பு வடிவ அமைப்பினைக் கொண்டிருக்கும்.
* இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும்.
* ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும்.
* இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும்.
* அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் உடையது.
* பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
* செப்டம்பர்-நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இந்த மரங்களில் பூக்களைக் காணலாம்.
* இதன் காய்கள் நீளமாக, சன்னமான கம்பியைப் போன்று இரட்டையாக இருக்கும்.
பயன்கள் :
* ஏழிலைப்பாலை மரத்திலிருந்து பள்ளிகளுக்கு கரும்பலகைகள் செய்யப்படுகின்றன.
* இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.
* இந்த மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவ பொருட்கள் தாயரிக்கப்படுகின்றன.
* இந்த மரம் தீக்குச்சிகள் தாயாரிக்கப் பயன்படுகிறது.
* இந்த மரம் நாள்பட்ட வயிற்று வலி, பாம்புகடி, வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
* மரத்தின் பால் வயிற்று புண்கள் (அல்சர்) குணமாக்கும் தன்மை உடையது.
கருத்துகள் இல்லை