* மரத்தின் பெயர் : ஜாதிக்காய் மரம்
* தாவரவியல் பெயர் : மிருஸ்டிகா பிராக்ரன்ஸ்
* ஆங்கில பெயர் : Nutmeg Tree
* தாயகம் : இந்தோனேசியா
* மண் வகை : வண்டல் மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மிருஸ்டிகேசி
* மற்ற பெயர்கள் : நட்மெக், ஜெய்பால், ஜாதிப்பாலா, ஜெயபாலா, ஜத்தி பால், ஜக்காயி, ஜாத்தி பாலா
பொதுப்பண்புகள் :
* ஜாதிக்காய் மரம், வெப்பமண்டலத்தில் வளரும் பசுமை மாறா மரம்.
* சுமார் 65 அடி உயரம் வளரும் நடுத்தரமான மரம்.
* மரத்தில் பட்டை சாம்பல் நிறம் கலந்த கருமை நிறமாக இருக்கும்.
* இதன் இலைகள் நீள் வட்டமாக நுனி கூர்மையாக இருக்கும்.
* பூக்கள் கொத்தாக குடைபோல படர்ந்திருக்கும்.
பயன்கள் :
* தேமல், படை போன்ற தோல் வியாதிகள், அம்மையினால் ஏற்படும் கொப்புளங்கள், ஆண்மைக்குறைவு, விந்து பலவீனம், நரம்புத் தளர்ச்சி, தசைப் பிடிப்பு, தசை வலி, மூட்டுவலி, பக்கவாதம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் என பலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது ஜாதிக்காய்.
* அத்தியாவசிய எண்ணெய்கள் தயாரிக்கும் தொழில், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழில், மற்றும் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஜாதிக்காய் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* ஜாதிக்காய் மரத்தில் 30 கிராம் எடை கொண்ட பழங்களிலிருந்து பெறப்பட்ட விதைகளை ஜூன் - ஜூலை மாதங்களில் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்ய வேண்டும்.
* இந்த மாதிரி தேர்வு செய்யப்பட்ட விதைகளை 30 செ.மீ இடைவெளியில் 2.5 - 5.0 செ.மீ ஆழத்தில் நடவு செய்து நன்றாக மண் அணைத்து விட வேண்டும். தினமும் பூவாளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.
* விதைகள் ஒரு மாதத்தில் இருந்து முளைக்க தொடங்கும். அதுமட்டுமல்லாமல் நான்கு மாதங்கள் வரை விதைகள் முளைப்பது தொடர்ந்து இருக்கும்.
* ஒரு வருட கால வயதுள்ள நாற்றுகளை 35 x 15 செ.மீ அளவு கொண்ட பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். பின் 18 - 24 மாத வயதுடைய நாற்றுகளை நன்கு உழுது தயார் செய்த வயல்களில் நடவேண்டும்.
* நாற்றுகள் நட 60 செ.மீ நீள, அகலம் மற்றும் ஆழம் இருக்குமாறு குழிகள் தோண்டவேண்டும். இடைவெளி 8 x 8 மீட்டர் இருபுறமும் இருக்கவேண்டும்.
* நடவு செய்ய உள்ள குழிகளில் தொழு எரு, தோட்டத்து மண் ஆகியவற்றை இட்டு நிரப்பி வைக்கவேண்டும். பருவமழை ஆரம்பம் ஆகும் போது நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். ஜூன் - டிசம்பர் மாதங்களில் நட வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* நடவு செய்த இளஞ்செடிகளுக்கு நல்ல நிழல் கொடுக்க வேண்டும். மரங்களுக்கிடையே நிழல் தரக்கூடிய வாழை மரத்தை வளர்க்கலாம்.
* ஜாதிக்காயில் பூச்சிகளும், நோய்களும் குறைவு என்பதால் அதிகமாக நோய் தாக்கம் இருக்காது.
* மேலும் ரொரன்தஸ் என்னும் ஒட்டுண்ணிச் செடியினால் மரத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணிச் செடியை வெட்டி எறிய வேண்டும்.
கருத்துகள் இல்லை