* மரத்தின் பெயர் : மல்பெரி மரம்
* தாவரவியல் பெயர் : மோரஸ் ஆல்பா
* ஆங்கில பெயர் : Mulberry Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மோரேசியே
* மற்ற பெயர்கள் : பட்டுப்பூச்சி மரம்
பொதுப்பண்புகள் :
* மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
* ஏப்ரல் முதல் மே மாதங்களில் மல்பெரி விதைகளை வளமான மண்ணில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
* பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
* குளிர்ச்சியான பகுதிகளில் இந்த மரம் இலைகளை உதிர்க்கும். வெப்பமான பகுதிகளில் இது பசுமை மாறாத வண்ணம் காணப்படும்.
* உயரம் : 10 -20 மீட்டர்
பயன்கள் :
* கேக் மற்றும் இனிப்பு வகைகள் தயார் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மல்பெரி இலையின் சாற்றின் மூலம் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்.
* கேன்சர், மனச்சோர்வு போன்றவற்றை நீக்கும் தன்மை இந்த மல்பெரி மரத்திற்கு உள்ளது.
* விரியன் பாம்பு விஷத்தைக் முறிக்கும் அபூர்வ சக்தி உடையது மல்பெரி மரத்தின் இலைச்சாறு.
* கற்றுக் கொள்ளும் சக்தி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* மல்பெரி மரமானது விதை, நாற்று, விதைக்குச்சி போன்றவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
* விதைகள் உலர்ந்த பின்னர் அவற்றை நீரில் போட வேண்டும். அதில் மிதக்கும் விதைகளை விட்டுவிட்டு மூழ்கிய விதைகளை தேர்வு செய்து விதைக்க வேண்டும்.
* ஏப்ரல் முதல் மே மாதங்களில் மல்பெரி விதைகளை வளமான மண்ணில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம். மரங்களின் இடைவெளி சுமார் 5 மீ x 4 மீ இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
* இதற்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே தேவைக்கேற்ப பாசனம் செய்தல் என்பது இன்றியமையாதது ஆகும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* நடவு செய்யும் போது விதைகள் அல்லது நடவு குச்சிகளை உயிர் உரங்களில் நனைத்து நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் வேர் சம்பந்தமான நோய்களை தவிர்க்கலாம்.
* மேலும் இலைகள் சுருண்டு விடுவதற்கு வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை