* மரத்தின் பெயர் : மருத மரம்

             * தாவரவியல் பெயர் : தெர்மினலியா அர்ஜூனா

             * ஆங்கில பெயர் : Arjuna Tree

             * தாயகம் : இந்தியா

             * மண் வகை : ஆற்று வண்டல் மற்றும் மணல் கலந்த மண்ணில் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : காம்ப்ர்டேசி

             * மற்ற பெயர்கள் : அர்ஜூனா

பொதுப்பண்புகள் :

             * மருத மரம் 30-60 மீ உயரம் வளரக்கூடிய மரமாகும்.

             * அடிமரத்தின் சுற்றளவு 7-10 மீ இருக்கும்.

             * மரப்பட்டை வெண்சாம்பல் நிறம் கொண்டிருக்கும். இலைக்காம்பு 2 செ.மீ நீளம் இருக்கும்.

             * மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.

             * இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில், முக்கியமானது மருத மரம்.

             * மரத்தின் உட்புறம் சிவப்பு. உதிர்ந்த பூவும் சிவப்பு.

பயன்கள் :

             * மருத மரப்பட்டையில் ப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால் ரத்தம் உறைதலைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் மருத மரப்பட்டைக்கு உண்டு.

             * ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை (தலா மூன்று) மென்று விழுங்கினால், உடனடியாகக் குணமாகும்.

             * இலை, பூ, காய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொதிக்கவைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

             * இலையை அரைத்துப் பாலில் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால், பித்த வெடிப்புகள் நீங்கும்.

             * இதன் பழத்தை நீராவியில் வேகவைத்து, பிசைந்து புண்களில் வைத்துக் கட்டினால், புண்கள் விரைவில் ஆறும்.

             * மருதம் பட்டையைப் பொடித்து, இரண்டு கிராம் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மூட்டு வலி குறையும்.

            * இதன் பட்டை குடல் புண்ணிற்குப் பயன்படுகிறது. மற்றும் பல் சொத்தைக்குப் பயன்படுகிறது.

             * ஒற்றைத் தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் பருமன் போன்றவற்றிற்கும் இம்மரம் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

               * மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

               * ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

               * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.

              * 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

             * செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.

             * இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் :

               * இதில் நோய் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.

               * வேப்ப எண்ணெய் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

மருத மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

1 கருத்து: