* மரத்தின் பெயர் : மஞ்சள் இலவு மரம்
* தாவரவியல் பெயர் : கோச்லோஸ்பெர்மம் ரெலிஜியோசஸம்
* ஆங்கில பெயர் : Yellow Silk Cotton Tree, Torchwood Tree, Buttercup Tree
* தாயகம் : இந்தியா, பர்மா, தாய்லாந்து
* மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பிக்சேசி
* மற்ற பெயர்கள் : காட்டுப்பருத்தி, கால்கால், கணேரி, கொண்டகோகு, செம்பண்ணி, கோல்டன் காட்டன் ட்ரீ
பொதுப்பண்புகள் :
* மஞ்சள் இலவு மரம் பூக்களுக்கு தங்க நிறமும், வாசனையும் தரும் சிறிய மரம்.
* சாலை ஒரங்களில், வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், அலுவலக, தொழிலகத் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கலாம். ஆண்டு முழுவதும் இந்த மரங்கள் பூக்கும்.
* உயரம் : 7.5 மீட்டர்.
பயன்கள் :
* பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் இலவு மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பிசின் ஆகியவை பயன்படுகிறது.
* சீதபேதி, வயிற்றுப்போக்கு மற்றும் இருமல் ஆகியவற்றைக் குணப்படுத்த இது பயன்படுகிறது.
* இந்த மரத்தில் வடியும் பிசின் அழகு சாதனப் பொருட்கள், காலிகோ பிரிண்டிங், மிட்டாய்கள் மற்றும் மருந்துகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்திலிருந்து பெறப்படும் பஞ்சினை கொண்டு தலையணை மற்றும் மெத்தைகள் செய்யலாம்.
* இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்னெயின் மூலம் சோப்பு தயாரிக்கலாம், மேலும் அதன் புண்ணாக்கை கால்நடைகளுக்கு தீவனமாகத் தரலாம்.
* பயிர்களுக்கு உரமாகவும், அடுப்பெரிக்க விறகாகவும் இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை