* மரத்தின் பெயர் : நெட்டிலிங்க மரம்
* தாவரவியல் பெயர் : பாலியால்தியா லாங்கிஃபோலியா
* ஆங்கில பெயர் : False ashoka tree
* தாயகம் : இலங்கை
* மண் வகை : வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : அனோனேசி
* மற்ற பெயர்கள் : போலி அசோகம்
பொதுப்பண்புகள் :
* நெட்டிலிங்க மரம் ஒரு பசுமை மாறா மரமகும்.13மீ உயரம் வரை வளரக்கூடியது.
* நெட்டிலிங்க மரத்தின் இலைகள் நீளமாகவும், ஓரங்கள் வளைந்தும், பளபளப்பாகவும் காணப்படுகிறது.
* லிங்க வடிவில் நீளமாக நீண்டு இருப்பதால், இந்த மரம் நெட்டிலிங்க மரம் எனப்படுகிறது.
* செழிப்புள்ள இடங்களில் இந்த மரம் வளரக்கூடியது.
* பிப்ரவரி மாதத்தில், இலைகளின் கோணப்பகுதியிலிருந்து பூக்கள் உருவாகின்றன.
* வெளிர்ப்பச்சை நிறத்தில் நட்சத்திரவடிவ பூக்கள், பச்சை நிறக் காய்களாக மாறுகின்றன.
* காய்கள் பழங்கள் உருளை வடிவில் காணப்படும். விதைகளிலிருந்து புதிய கன்றுகள் தோன்றுகின்றன.
* நெட்டிலிங்க மரத்தின் மரப்பகுதி வெண்மையாகவோ அல்லது சிறிது மஞ்சள் சாயத்துடனோ இருக்கும்.
பயன்கள் :
* இந்த மரத்தின் மூலமாக மரப்பீப்பாய்கள், முரசுகள், பெட்டிகள், போன்றவை செய்யலாம். மேலும் கட்டுமானப் பணிகளுக்கான சட்டங்களும் தயாரிக்கலாம்.
* பென்சில் செய்யவும், தீக்குச்சிகள் தயாரிக்கவும் நெட்டிலிங்க மரம் பயன்படுகிறது.
* பட்டையை நீரில் ஊறவைத்து, அந்த நீரை சீதபேதி உள்ளவர்களுக்கு கொடுக்கும் போது சீதபேதி குணமாகின்றது.
* இந்த மரத்தின் உள்பட்டையிலிருந்து வலுவுள்ள நார் உரித்து எடுக்கலாம்.
* அலங்காரத் தாவரமாக வீடுகளிலும் முகப்புகளிலும், கட்டிடங்களின் முன்புறங்களில் வளர்க்கலாம்.
* சாலையை ஒட்டி வளர்க்கும் போது, சிறந்த தாவரத் தடுப்பாக அமைந்து, ஒலியையும், தூசியையும் குறைத்து சூற்று சூழலைப் பாதுகாக்கிறது.
* சொறியாசிஸ் நோய்க்கு மருந்து தாயரிக்கப் பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை