* மரத்தின் பெயர் : திருவாச்சி மரம்

            * தாவரவியல் பெயர் : பகுனியா வேரிகாட்டா

            * ஆங்கில பெயர் : Thiruvachi Tree

            * தாயகம் : சீனா

            * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : பபேசியே

            * மற்ற பெயர்கள் : மந்தாரை மரம், சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி

பொதுப்பண்புகள் :

             * திருவாச்சி மரம் என்பது மந்தாரை மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

            * இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது திருவாச்சி மரம்.

            * திருவாச்சி மரம் மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகும்.

            * சிருவாச்சி, இருவாச்சி, திருஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

            * திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட குறு மரமாகும்.

            * திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடும்.

            * ஆன்மீகத்தில் திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை.

           * காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

பயன்கள் :

              * இலை, மலர் மற்றும் பட்டை ஆகியவை நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது.

             * திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும் திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

             * உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும்.

             * வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது.

            * திருவாச்சி இலைகள் இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

            * திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும்.

            * செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்த பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.

            * திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும்.

            * திருவாச்சி மலர்கள் கண்களைச் சுற்றி உள்ள கருவளையத்தை நீக்கி, கண்களின் சிவந்த நிறம் மாறி, குளிர்ச்சி உண்டாகும்.

            * பெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளை போக்கும் ஆற்றல் மிக்கது. திருவாச்சி மலரின் மொட்டுக்கள், பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும், தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும்.

            * தவில் வித்வான்களின் கைகளில் இருக்கும் குச்சி, திருவாச்சி மரத்தில் இருந்து செய்யப்படுவது ஆகும்.

            * மிகுந்த கலை நுணுக்கத்துடன் உருவாகும் இந்த தவில் குச்சியை, திருவாச்சி மரத்தில் இருந்து செய்வதற்கு, திருவாச்சி மரத்தின் எளிதில் உடையாத, மிகவும் வலிமையான அமைப்பே, காரணமாகும்.

திருவாச்சி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை