* மரத்தின் பெயர் : கொடுக்காபுளி மரம்
* தாவரவியல் பெயர் : பித்தசெல்லோபியம் டல்ஸ்
* ஆங்கில பெயர் : Madras Thorn, sweet Inga
* தாயகம் : மெக்சிகோ
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : பபேசியே
* மற்ற பெயர்கள் : கொருக்காபுளி, கோணப் புளியாங்கா மரம்
பொதுப்பண்புகள் :
* கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே நம் நினைவிற்கு வரும்.
* சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் உகா மரம் என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன.
* கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் இதற்கு பெயர் உண்டு.
* கொடிக்காய் மரமானது 30-100 செமீ விட்டமுடைய சாம்பல் வடிவ தண்டினைக் கொண்டுள்ளது.
* 5-20 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது.
* கொடிக்காய் மரமானது எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினைக் கொண்டுள்ளது.
* கொடிக்காய் மரத்தின் பூக்கள் சிறிதாக கோளவடிவில் வெள்ளை-பச்சை கலந்த நிறத்தில் காணப்படுகின்றன.
* கொடிக்காயானது 1 முதல் 3 வரை உள்ள வட்டங்களாக சுருள் வடிவில் காணப்படும்.
* கொடுக்காய்ப்புளியானது இனிப்பு அல்லது துவர்ப்பு சுவையினையோ அல்லது இரண்டும் கலந்த சுவையினையோ கொண்டிருக்கும்.
* கொடிக்காயினுள் பச்சைநிற விதைகளும், விதையினைச் சுற்றிலும் வெள்ளைநிற சதைப்பகுதியும் காணப்படுகின்றன. இக்காயானது பழுக்கும்போது விதைகள் கருப்பு நிறத்திற்கு மாறி சதைப்பகுதி பருத்து வெளியே தெரியும்படி காணப்படுகிறது.
* பாசன வாய்க்கால் ஓரங்களில் செழித்து வளரக்கூடிய கொடுக்காய்ப்புளி மரங்களுக்கென்று தனியாக பாசன வசதி தேவையில்லை. இந்த மரங்கள் குட்டையாகவும், முட்களுடனும் இருப்பதால் வேலிக்காகவும் கிராமங்களில் நடுவதுண்டு.
பயன்கள் :
* கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி, இலை, பட்டை, பூ ஆகியவை மருந்துப் பொருளாக உயோகிக்கப்படுகின்றன.
* கொடுக்காய்ப்புளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.
* கொடுக்காய்ப்புளி காயில் உள்ள விட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது.
* கொடுக்காய்ப்புளி மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.
* கொடுக்காய்ப்புளி பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாத்து அவற்றை வலுவாக்குகிறது.
* இதன் இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
* இதன் விதைகளிலிருந்து எண்ணைய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணைய் சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
* கொடுக்காய்ப்புளியின் பட்டையிலிருந்து மஞ்சள் நிறச்சாயம் தயார் செய்யப்படுகிறது.
* கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.
வளர்ப்பு முறைகள் :
* இந்த மரம் அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் சரளை நிலங்களில் நன்றாக வளரும்.
* கொடுக்கப்புளி நடவு செய்யவுள்ள நிலத்தில் மூன்று அடி நீளம், அகலம், ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும்.
* அந்த குழியில் இரண்டடி உயரத்துக்கு கரம்பை, குப்பை எருவைப் போட்டு குழியை ஒருமாதம் ஆறவிடவேண்டும்.
* அதற்கு பிறகு, செடியை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சலாம். கொடுக்காப்புளி நடவுக்கு புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்கள் ஏற்றவை.
* இந்த மாதங்களில் நடவு செய்தால், தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடி வளர்ந்துவிடும்.
* ஒவ்வொரு குழிக்கும் முப்பது அடி இடைவெளி இருக்கவேண்டும். இப்படி நடவு செய்யும் போது ஏக்கருக்கு 50 செடிகள் வரை நடலாம். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் வரும்.
* அவற்றை உதிர்த்து விடவேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும், வலுவானதாகவும் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால், இரண்டாவது ஆண்டில் இருந்து கொடுக்காப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும்.
* ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம்வரை கொடுக்காப்புளியின் மகசூல் காலம்.
* இதற்கு ஆண்டுக்கு இரண்டு முறை அடியுரம் கொடுத்தால் போதும்.
* நான்காவது ஆண்டில் இருந்து ஒருமரத்தில் 100 முதல் 150 கிலோ காய்கள் கிடைக்கும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* பூச்சி, நோய் தாக்குதல் இந்த மரத்தில் இருக்காது. காய்ப்பு வரும் நேரத்தில் வளர்ச்சி ஊக்கிகளைக் கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை