* மரத்தின் பெயர் : வெப்பாலை

           * தாவரவியல் பெயர் : ரைட்டியா டிங்டோரியா

           * ஆங்கில பெயர் : Wrightia Tinctoria

           * தாயகம் : இந்தியா

           * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : அப்போசைனேசி

           * மற்ற பெயர்கள் : வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம்

பொதுப்பண்புகள் :

           * வெப்பாலை இந்திய மண்ணைத் தாயகமாகக் கொண்டது.

           * நாம் சாலை ஓரங்களிலும், காடு, மலைப் பகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை.

            * வெப்பாலை மரம் சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடியது.

            * வெப்பாலை பீன்ஸ் போன்ற காய்களைக் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும்.

            * இலைகள் 8 முதல் 15 செ.மீ நீளத்துக்கு வேப்ப மரத்தின் இலையின் அமைப்பினை ஒத்திருக்கும்.

            * வெப்பாலையின் பூக்கள் வெண்ணிறத்திலும் நறுமணமுடையதாகவும் மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் மலரும்.

           * வெப்பாலையின் இலை, பட்டை, வித்து ஆகியன மருந்தாகிப் பயன் தரவல்லது.

           * வெப்பு எனப்படும் உஷ்ண சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது.

           * இரும்பாலை, நிலப்பாலை என்றெல்லாம் கூட இதற்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு.

பயன்கள் :

           * மிகுதியான பால் உள்ள மரமான வெப்பாலை மிகுதியான மருத்துவ பலன்களும் கொண்டது.

          * வெப்பாலை மஞ்சள் காமாலையைப் போக்கும் மரம்.

          * உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலை குணபடுத்தக் கூடியது.

          * வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு போன்ற நோய்களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை.

          * வெப்பாலை பேதி மற்றும் சீதபேதிக்கு சிறந்த மருந்து.

          * வெப்பாலை மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் போக்க கூடியது.

          * வெப்பாலை பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

           * வெப்பாலை கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும் ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது.

           * வெப்பாலை மரப்பட்டையில் அர்சோலிக் அமிலம் என்று குறிப்பிடப் பெறும் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளது. இந்த அர்சோலிக் அமிலம் உடலின் தசை வளர்ச்சிக்குப் பயன் தருகிறது. மேலும் இது குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது.

வளர்ப்பு முறைகள் :

            * அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.

           * 6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட வெப்பாலை போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

           * அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால் போத்துகளைப் பதியன் செய்யலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * இந்த மரத்தில் நோய் தாக்குதல் குறைவு.

            * ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை.

வெப்பாலை பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை