* மரத்தின் பெயர் : களாக்காய் மரம்

           * தாவரவியல் பெயர் : கேரிஸ்ஸா காரண்டாஸ்

           * ஆங்கில பெயர் : Bengal currant tree

           * தாயகம் : இந்தியா

           * மண் வகை : மணல்சாரி வறண்ட மண்ணில் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : அப்போசயனேசி

பொதுப்பண்புகள் :

            * மார்ச், ஏப்ரல் மாதத் தேனீக்களுக்கு, தேன் தரும் பூக்களைத் தரும் மரம்.

            * பச்சை இலைகள் செறிந்து, வெண்ணிறத்தில், பளிச்சென்று மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும். வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம் இந்த களாக்காய் மரம்.

           * இந்த மரத்தின் உயரம் 5 மீட்டர் ஆகும்.

பயன்கள் :

            * இந்த மரத்தின் பழங்கள் மூலம் ஜாம், ஜெல்லி தயார் செய்யலாம். இது இரும்புச் சத்தும், வைட்டமின் சி சத்தும் உடையது.

            * இந்த மரத்தின் இலைகள், கிளைகள், மரம் ஆகியவை அடுப்பெரிக்க விறகாக பயன்படும்.

            * அடர்ந்த தழையமைப்பைக் கொண்டிருப்பதால், இவை வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி, காற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது.

வளர்ப்பு முறைகள் :

           * களாக்காய் பழங்களை இரண்டு நாட்கள் வைத்திருந்தால், அவை சிறிது அழுகிய நிலைக்கு மாறிவிடும்.

           * பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால், விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

          * 18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி, மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

          * பின்னர் அதன் மீது 50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும்.

          * விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும்.

          * பின்னர் நாற்று ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்ததும் தேவையான இடத்தில் எடுத்து நடவு செய்யலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

            * 6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.

            * எனவே தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்க வேண்டியதில்லை.

களாக்காய் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை