* மரத்தின் பெயர் : வேங்கை

          * தாவரவியல் பெயர் : டிரோகார்பஸ் மார்செபியம்

          * ஆங்கில பெயர் : Vengai Maram

          * தாயகம் : இந்தியா

          * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

          * தாவர குடும்பம் : பபேசியே

பொதுப்பண்புகள் :

             * மரங்கள் நமக்கு எல்லா வகைகளிலும் நன்மை மட்டுமே செய்கிறது. ஒவ்வொரு மரமும் தனி சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் இந்த வேங்கை மரம் தனி சிறப்பு வாய்ந்தது.

             * இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது வேங்கை மரம்.

            * வேங்கை மரம் 30 மீ உயரம் வரை வளரக் கூடியது.

            * இந்தியாவின் கேரள-கர்நாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

           * வணிகரீதியான மரங்களின் வரிசையில் வரும் தேக்கு, தோதகத்தி ஆகியவற்றுக்கு அடுத்து தரமான மரமாக கருதப்படுவது வேங்கை மரம்.

           * வேங்கை மரத்தை வெட்டும் போது, சிவப்பு நிறத்தில் ரத்தம் போல சாறு வடிந்துக்கொண்டே இருக்கும்.

           * வேங்கை மரம் தாழ்ந்தக் குன்றுப் பகுதிகள், மலையை ஒட்டியச் சமவெளிப் பகுதிகளில் நன்றாக வளரும்.

           * வேங்கை மரத்துக்கு உதிர வேங்கை மரம் என்று வேறு பெயரும் உண்டு.

           * வேங்கை மரத்து பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த பூக்கள் சிறுத்தை உடலில் உள்ள புள்ளிகள் போல காணப்படுகின்றன.

பயன்கள் :

              * வேங்கை மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணமுடையவை.

              * வேங்கை மரத்தின் இலையும், பூவையும் உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்.

             * வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

             * வேங்கைப் பட்டையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால், இதன் பட்டைக் கஷாயம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்பு சம்பந்தமான குறைபாடுகளைக் குணப்படுத்தும்.

              * வேங்கைப் பட்டை இரும்புச் சத்தை அதிகரிக்கப் பயன்படுத்தும் மருந்துகளிலும் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

              * வேங்கை மரத்தை வெட்டும் போது ரத்தம் போல சிவப்பு நிறத்தில் பால் வடியும், இது கால் பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணமாக்கும்.

              * வேங்கை மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்கு பொட்டாக வக்க பயன்படுத்தலாம்.

              * வேங்கை மரத்தின் சிவப்பு நிற பிசின் தோல் நோயை குணப்படுத்தும்.

              * வேங்கை மரம் உள்ள பகுதியில் மின்னல், இடி தாக்காது.

              * வேங்கை மரம் கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டது.

              * வேங்கை மரம் கோவில்களின் கொடிமரம், வீட்டு கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

              * வேங்கையை பயிரிட பல வழிமுறைகள் உள்ளன. நேரடியாக விதையை விதைக்கலாம். நாற்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யலாம். நாற்றுக்குச்சிகள் தயாரித்தும் நடலாம். இம்மூன்றில் நீண்ட ஆணிவேர் உருவாகி மரக்கன்று நன்கு வளர நேரடி விதைப்பு அல்லது நாற்றுகள் மூலம் மரம் வளர்க்கும் முறையை கடைபிடிப்பதே சிறந்ததாகும்.

             * மார்ச் மாதங்களில் மரத்தில் நெற்றுக்கள் இருக்கும். ஒரு கிலோ எடையில் 1600-2000 நெற்றுக்கள் கிடைக்கும். 4.5 செ.மீ நீளமும், 3.5 செ.மீ அகலமும் கொண்ட ஓர் விதை கொண்ட தட்டையான நெற்றுக்கள் நீண்ட நாட்கள் மரத்திலேயே இருக்கும்.

             * ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் காணப்படம் நெற்றுகள் பின்னர் பழுப்பு நிறமாக மாறும். மரத்திலிருந்து உதிர்ந்து காற்றிலே பறந்து செல்லக் கூடிய தன்மையுடையது. எனவே நெற்றுக்கள் முதிர்ந்தவுடன் மரத்திலேயே நெற்றுக்களை சேகரித்து விட வேண்டும்.

             * 10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தியை மணலும், எருவும் வண்டலும் கலந்து அமைக்க வேண்டும்.

             * நெற்றை விதைக்கும் பொழுது நீரிலோ (அல்லது) சாணக் கரைசலிலோ இரண்டு நாட்கள் ஊற வைத்து 20 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். 40-90% முளைப்புக் கிடைக்கும்.

             * தேக்கு நடுவது போன்று 4மீ x 4 மீ இடைவெளியில் 1 ஏக்கருக்கு 250 நாற்றுகள் நடவு செய்யலாம். பின்னர் வளர்ந்து வரும் நிலையில் சுமார் 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து வளர்ச்சி குறைவாக உள்ள மரங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள மரங்களை அகற்றி சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு விற்றிடலாம்.

              * இவ்வாறு நீக்கப்பட்ட மரங்கள் போக சுமார் 200 மரங்கள் அறுவடை செய்யும் காலம் வரை நன்கு பராமரித்து வரவேண்டும். அவ்வப்போது நோயினால், இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி பராமரித்து வரவேண்டும். ஆரம்பத்தில் வளர்ச்சி நிதானமாக இருக்கும்.

              * பின்னர் இரண்டாம் வருட முடிவில் சுமார் 1.7 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து விடும். சில சமயம் கடும் வறட்சி தோன்றினால் இலையுதிர்ந்து பட்டுப் போனது போன்று காட்சியளிக்கும்.

              * பின்னர் மழை கிடைத்ததும் துளிர்த்து விடும். ஓங்கி உயர்ந்து வளரும் பொழுது சூரிய ஒளித் தேவை அதிகமாகும். எனவே பிறமரங்களின் நிழல் விழாமல் கவனிக்க வேண்டும்.

               * 10 ஆண்டுகளில் சுமார் 100 செ.மீக்கு குறையாத சுற்றளவுள்ள மரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கரில் வளர்க்கக்கூடிய 250 மரங்களில் இடைப்பட்ட காலத்தில் கலைத்து எடுக்கப்பட்ட மரங்கள் போக இறுதியில் சுமார் 200 மரங்கள் கிடைக்கும்.

நோய் தடுக்கும் முறைகள் :

                 * இந்த மரத்தை அதிகமாக இலை வறட்சி நோய் தாக்கும். இந்த நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

வேங்கை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை