* மரத்தின் பெயர் : குமிழ் மரம்
* தாவரவியல் பெயர் : மெலினா ஆர்போரியா
* ஆங்கில பெயர் : Gmelina Arborea Tree
* தாயகம் : இந்தியா
* தாவர குடும்பம் : லேமியேசியேபயன்கள் :
பயன்கள் :
* குமிழ் மரத்தின் இலை தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
* தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தயாரிக்கவும், ஒட்டுப்பலகை செய்ய இந்த மரம் ஏற்றதாகும்.
* மரத்துண்டுகள் பழுப்பு மஞ்சள் நிறமுடையதாகவும், எளிதில் அறுக்கக்கூடிய தன்மையுடையதாக இருப்பதாலும் பலவிதமான கைவினைப் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் செய்ய உகந்த மரமாகும்.
* குமிழ் மரத்தின் வேர்கள் வலிப்பு நோய்க்கு மிக சிறந்த தீர்வாகும்.
* காய்ச்சல், செரிமானம் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இதன் சாறு நல்ல மருந்தாகும்.
வளர்ப்பு முறைகள் :
* குமிழ் மரத்தை நேரடியாகவும் விதைக்கலாம், நாற்று விட்டு நடவு செய்யலாம். மேலும் நாற்றுக்குச்சிகளை தயார் செய்தும் நடவு செய்யலாம்.
* நாற்றுகள் தயாரிக்க மேட்டுப்பாத்திகள் அமைத்து வரிசைக்கு வரிசை 15 x10 செ.மீ என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும்.
* 3-4 மாதத்தில் கன்றுகளை வேறு இடத்தில் நடவு செய்து கொள்ளலாம்.
* விறகிற்காக விதைக்கும் போது 2x2 மீட்டர் இடைவெளியில் விதைக்கலாம்.
* நீர் செழிப்புள்ள இடங்களில் நடவு செய்தது முதல் ஆண்டின் இறுதிக்குள் 3 மீட்டர் உயரம் வளர்ந்து விடும்.
* நட்ட 5-8 ஆண்டுகளில் மரம் பலன் தர ஆரம்பிக்கும். இதனை மறுதாம்புக்கும் பயன்படுத்தலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* குமிழ் மரத்திற்கு நோய் தாக்குதல் என்பது மிக குறைவு, இருப்பினும் வேப்பங்கொட்டைச்சாறு அவ்வபோது தெளித்து விடலாம்.
கருத்துகள் இல்லை