* மரத்தின் பெயர் : கடுக்காய்
* தாவரவியல் பெயர் : டெர்மினாலியா செபுலா
* ஆங்கில பெயர் : Yellow Myrobalan, Chebulic Myrobalan, Black Myrobalan
* தாயகம் : இந்தியா, சீனா, மலேசியா
* மண் வகை : குன்றுப்பகுதியில் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : காம்பிரெட்டேசி
பொதுப்பண்புகள் :
* கடுக்காய் மரம் சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படும்.
* கடுக்காய் ஒரு இலையுதிர்க்கும் மரமாகும். குளிர்காலத்தில் இலைகளை உதிர்த்து, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் துளிர்க்கும்.
* மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூக்கும் தன்மை உடையது.
* இதன் பூக்கள் மிக சிறியவை. சிறிது மணமும் இந்த பூவில் காணப்படும்.
* ஈரத் தன்மை அதிகமுள்ள பகுதிகளில் கடுக்காய் மரம் காணப்படுவதில்லை.
பயன்கள் :
* கடுக்காய் வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.
* இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிட்டால், கபத்தை தீர்க்கும்.
* கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து காலைதோறும் சாப்பிட்டு வந்தால், சுருக்கங்கள், முதுமைத்தன்மை, நரை போன்றவை நீங்கும்.
* கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
* கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.
* கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி போன்ற பல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
* 8 2 கிராம் கடுக்காய்ப் பொடியை, தண்ணீருடன் கலந்து மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.
* மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் போன்றவையும் குணமாகும்.
வளர்ப்பு முறைகள் :
* கடுக்காயை பயிரிட விதைகள் மூலம் நாற்று விட்டு நாற்றுகளை நடவு செய்யலாம். நாற்று குச்சிகளாக நடுவது மிகவும் சிறந்தது.
* கடுக்காய் விதைகளை 2 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம்.
* விதைக்கும் முன் விதைகளை துரிதப்படுத்த உயிர் உரங்களில் ஏதேனும் ஒன்றில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
* முதலில் மேட்டுப்பாத்தியில் நாற்றுவிட்டு ஒரு ஆண்டு வயது கன்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.
* ஒற்றை வரிசை நடவு முறையில் 10 மீட்டர் இடைவெளியில் நடலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* விதைக்கும் முன் விதைகளை உயிர் உரங்களில் நனைத்து நடுவதால் வேர் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தலாம்.
* இருப்பினும் வேப்பங்கொட்டை கரைசலை அவ்வபோது தெளித்து விடலாம்.
கருத்துகள் இல்லை