* மரத்தின் பெயர் : காயா மரம்
* தாவரவியல் பெயர் : மெமிசிலான் அம்பலேட்டம்
* ஆங்கில பெயர் : Anjani Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மெலஸ்டோமேசி
* மற்ற பெயர்கள் : டெலக் ஏர் ட்ரீ, அயன் வுட் ட்ரீ, காயா, குர்ரிகாயா, அல்லி, அஞ்சனி, கசாய், காவா, பாண்டி காயா, அஞ்சன், காயா, அல்லி, அஞ்சன், லிம்பா, லோகண்டி ஜாட், மண்டி, லக்கோண்டி, கஞ்சாவு, ஆனக்காயாவு, கல்யம், கனிலா, கனாலி, கன்னாவு, கஷாவு, நெட்டுஞ்செட்டி
பொதுப்பண்புகள் :
* காயாமரத்தை கிருஷ்ணருக்கு உரிய மரம் என குறிப்பிடுவர்.
* சங்க இலக்கியமான பரிபாடலில் கிருஷ்ணபரமாத்மாவின் உடல் அழகுக்கு உவமையாக இந்த மரத்தை குறிப்பிட்டுள்ளனர்.
* இந்த மரம் மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
* காயாமரத்தின் பூக்கள் கருமை, ஊதா, நீலம் என பல நிறங்களில் பூக்கும் தன்மை கொண்டது. அதாவது கோடையில் பூக்கும். இந்த பூக்களை பார்க்க மயில்களின் தோகைபோல இருக்கும்.
பயன்கள் :
* மஞ்சள்நிற சாயம் தயாரிக்க காயாமரத்தின் இலைகள் பயன்படுகின்றன.
* இந்த மரங்கள் கட்டுமானச் சாமான்கள் செய்யவும், கம்பங்கள், தூண்கள் மற்றும் மேஜை நாற்காலிகள் செய்யவும் பயன்படுகின்றன.
* இந்த மரம் சில நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வைரஸ் நோய்கள் இந்த மரத்தின் மூலம் குணப்படுத்தப்படுகின்றன.
* இந்த மரத்தின் இலை கஷாயம், வேர்க்கஷாயம் போன்றவை ரத்தத்தை சுத்தப்படுத்த பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* காயா மரத்தின் பழத்திலிருந்து சிறு விதைகளை சேகரித்து, மரப்பெட்டிகளில் நாற்று விட்டு பின்னர் நாற்றுகளை நிலத்தில் நாற்றங்கால் அமைத்து நடவு செய்ய வேண்டும்.
* கன்றுகள் 30-45 செ.மீ உயரம் வளர்ந்தவுடன், அதை தேவையான இடத்தில் எடுத்து நடவு செய்யலாம்.
* நடவு இடைவெளி 2x2 மீட்டர் இருத்தல் நல்லது.
கருத்துகள் இல்லை