* மரத்தின் பெயர் : முந்திரி மரம்

            * தாவரவியல் பெயர் : அனார்க்காடியம் ஒசிடென்டேல்

            * ஆங்கில பெயர் : Cashew Tree

            * தாயகம் : அமெரிக்கா

            * மண் வகை : வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : அனகார்டிசியே

            * மற்ற பெயர்கள் : மரமுந்திரி

பொதுப்பண்புகள் :

            * முந்திரி மரமானது வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

            * நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

            * முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.

           * முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

பயன்கள் :

            * முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.

           * முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

           * கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.

           * முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

           * முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * ஜுன் - டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

              * நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

             * ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படும் செடிகள் ஏற்றது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.

             * தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.

            * செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.

           * ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

           * 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

           * 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும்.

           * உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் - ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.

            * ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

நோய் தடுக்கும் முறைகள் :

             * செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

             * மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும்.

             * தண்டுத் துளைப்பான் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த 5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி - பிப்ரவரி, மே - ஜூன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.

             * இலைத் துளைக்கும் புழுவை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

             * நுனிக்கருகல் நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும்.

முந்திரி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை