* மரத்தின் பெயர் : அனாகேச்சோ ஆர்கிட் மரம்
* தாவரவியல் பெயர் : பாஹினியா லூனாரியாய்டஸ்
* ஆங்கில பெயர் : Anacacho Orchid Tree, Texasplume, White Orchid Tree
* தாயகம் : அமெரிக்கா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பேபேசி
* மற்ற பெயர்கள் : டெக்கஸ் புளும், அனாகேச்சோ ஆர்கிட் ட்ரீ, சிகுவாகுவான் ஆர்கிட் ஷ்ரப், ஆத்தி மரம், மத்தாரை, இறுவாட்சி
பொதுப்பண்புகள் :
* அனாகேச்சோ ஆர்கிட் மரம் 8 முதல் 12 அடி உயரம் வரை வளரும். 6 முதல் 10 அடி அகலத்திற்கு பறந்து வளரும்.
* இதன் பூக்கள் பார்க்க ஆர்கிட் பூக்கள்போல இருக்கும். இவை துளிர்விடும் பருவத்தில் பூக்கத் தொடங்கி கோடைப் பருவம் வரைத் தொடரும். பூக்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் பூக்கும்.
* இந்த மரங்களை நடுவதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும். முழுமையான சூரிய வெளிச்சம் வேண்டும் அல்லது லேசான நிழல் இருந்தாலும் தாங்கி வளரும்.
* முக்கியமாக வறட்சியைத் தாங்கும். அதிக நீர்ப்பாசனம் தேவைப்படாது. பரவலான மண் வகைகளில் வளரும்.
* பாறைகள் நிறைந்த மண், சுக்காம்பாறை நிறைந்த மண், மணற்சாரி மண், நடுத்தரமான இருமண்பாடு மண் ஆகியவற்றிலும் நன்கு வளரும்.
பயன்கள் :
* அனாகேச்சோ ஆர்கிட் மரம் வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகுக்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.
* தேனீக்களுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும் பிடித்தமான மரம். அதாவது இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி வாழ்ந்து அதன் மூலம் தேனை கொடுக்கிறது.
கருத்துகள் இல்லை