* மரத்தின் பெயர் : வாகை மரம்
* தாவரவியல் பெயர் : போஸ்வாலியா செரேட்டா
* ஆங்கில பெயர் : Albizia Lebbeck
* தாயகம் : தெற்காசியா
* மண் வகை : பரவலான மண்வகைகளில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பபேசியே
* மற்ற பெயர்கள் : சரஸ், கோக், வாகா, காலோ சிரிஸ், டினியா
பொதுப்பண்புகள் :
வாகை மரத்தின் முதிர்ந்த காயும், அதன் சலசலக்கும் ஓசையும் ஒரு சிறப்பாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கினால் இந்த மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும்.
வாகை மரமானது விதை, வேர்க்குச்சி, நாற்று போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது பலத்தண்டுகளையுடையதாகவும், பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது.
இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும்.
உயரம் - 15 முதல் 20 மீட்டர்.
பயன்கள் :
இந்த வாகை மரமானது பலவகையான பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதன் தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
வாகை மரத்தின் பட்டையானது டேனின் நிறைந்து காணப்படுவதால் தோல் பதனிட பெருமளவில் பயன்படுகிறது. இந்த மரத்தின் பிசின் மூலம் கோந்து தயாரிக்கலாம்.
இதன் பூக்கள் தேனீக்களுக்கு தேன் கொடுப்பதாகவும், நறுமண தைலம் தரும் வகையிலும் பயன்படுகிறது.
மேலும் வீட்டுத் தூண், உத்திரம், மரச்சாமான்கள், மரச்செக்குகள், மேஜை, நாற்காலி செய்யவும், காகிதம் தயாரிக்க, மற்றும் அடுப்பெரிக்க விறகு தரும் மரமாகவும் இது பயன்படுகிறது.
இந்த மரம் வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசு மற்றும் மாசுக்களை வடிகட்டி காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
வளர்ப்பு முறைகள் :
வாகை மரமானது விதை, வேர்க்குச்சி, நாற்று போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதலில் நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம், வேர் வளர்ச்சி உட்பூசணம், தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு ஆகிய இரண்டையும் குழியைச் சுற்றி தூவி விட வேண்டும்.
நடவு செய்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கேற்ப நீர் பாசனம் செய்யலாம்.
நடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
வாகை மரத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்பு கரைசலை 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் நோய்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை