* மரத்தின் பெயர் : சீத்தா மரம்
* தாவரவியல் பெயர் : அனோனா ஸ்குவாமோசா
* ஆங்கில பெயர் : Custard apple, Sugar-apple, Sweetsop
* தாயகம் : அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவு
* மண் வகை : வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : அனோனேசி
பொதுப்பண்புகள் :
* சீத்தா வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
* சீத்தா மரம் வளர உகந்த காலநிலை 25° C முதல் 41° C வரையாகும்.
* பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28° F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
* இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் வளரக்கூடியது.
* சீத்தா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
* இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும். அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும். சிறு கிளைகள் அதிகமாக இருக்கும்.
* பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிறமாக மாறும்.பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும். பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும்.
* காய்கள் ஆப்பிள் போன்று உரண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந்த்திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாக மாறும்.
பயன்கள் :
* சீத்தாப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகியவை இருப்பதால் அதிக இனிப்புசுவையை தருகிறது.
* ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.
* இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
* சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.
* இந்த இலை சயரோக வியாதியைக் குணப்படுத்தும் மற்றும் அல்சரைப் போக்கும்.
* இதன் விதை பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதைப்பொடி செய்து தலைக்குக் குளிக்கப் பேன் தொல்லை நீங்கும்.
* விதையில் 30 சதம் எண்ணெய் இருப்பதால் எண்ணெய் எடுக்கலாம். இது சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது.
* இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* சீத்தா விதைகள் விதைத்து இரண்டு முதல் நான்கு வாரங்களில் முளைத்துவிடும். ஒரு அடி உயரம் வளர்ந்ததும் எடுத்து நடவு செய்யப்படுகிறது. வேர்குச்சிகளில் ஒட்டுக்கட்டியும் உயர்ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
* மழைகாலங்களில் 2 X 2 X 2 அளவு குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். அதில் தெளிவான கன்றுகளை ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 160 செடிகள் நடலாம்.
* பொருத்தமான காலநிலை இருக்கும்பட்சத்தில் மூன்றுமுறை அறுவடை செய்ய முடிகிறது. சில பகுதிகளில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சீத்தாமரம் பூக்கிறது. ஜுன் - ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை