* மரத்தின் பெயர் : தூங்குமூஞ்சி மரம்
* தாவரவியல் பெயர் : அல்பீசியா சமன்
* ஆங்கில பெயர் : Rain Tree
* தாயகம் : தெற்காசியா
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : ஃபேபேசேயே
* மற்ற பெயர்கள் : பண்ணி வாகை, மழை மரம்
பொதுப்பண்புகள் :
* தூங்குமூஞ்சி மரம் 60-80 அடி உயரம் வளரக்கூடியது.
* அடிமரம் குட்டையாகவும் மேல் குடைபோல் பரந்தும் இருக்கும். இவை இரட்டைக் கூட்டிலை கொண்டது. ஆதில் 2-4 இணை ஈர்க்குகளும், ஒவ்வொரு ஈர்க்கிலும் 2-8 இணைச் சிற்றிலைகள் இருக்கும்.
* இரவிலே சிற்றிலைகள் கைகளைக் கூப்புவதுபோல் இணையாக மடிந்து கொண்டு தொங்கும். பொழுது சாயும் சமயத்தில் இவ்விலைகள் மூடி தொங்கிக் கொண்டு இருக்கும். இதனால் இதை தூங்குமூஞ்சி மரம் என்கின்றனர். மேலும் மழை வருவது போல இருக்கும் சமயத்திலும் இப்படி மடிந்து தொங்கிக்கொள்ளும்.
* இம்மரத்தில் சில வண்டுகள் விழுந்து இளந்திசுக்களைத் தொலைத்துச் சாற்றை உறிஞ்சும். இப்பூச்சிகள் அரிப்பதால் சாறு சிறு மழைத்துளிகள் போல் சிந்துவதுண்டு. இதனால் இம்மரத்தை மழை மரம் என்றும் அழைப்பர்.
* இந்த மரம் 30 வகை உண்டு. இதன் கனியும், இலையும் பசுவிற்கு போட்டால் பால் அதிகம் கொடுக்கும்.
பயன்கள் :
* கோடை நிழலுக்கு தூங்குமூஞ்சி மரம் மிகவும் ஏற்றது. இது பூமியை குளிர்விக்கும் திறன் கொண்டது.
* கால்நடைத் தீவனத்திற்கு தூங்குமூஞ்சி மரத்தின் இலைகள் பயன்படுகின்றன.
* மேய்ச்சல் நிலங்களில் நடுவதற்கு இந்த மரம் ஏற்றது.
* சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி மரத்தை நடவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை