* மரத்தின் பெயர் : இந்திய பாதாம் மரம்
* தாவரவியல் பெயர் : டெர்மினாலியா கெட்டப்பா
* ஆங்கில பெயர் : Badam Tree, Almond Tree
* தாயகம் : சிங்கப்பூர், இந்தொனேசியா
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : ரோசேசியே
* மற்ற பெயர்கள் : பாதானி, வாதானி
பொதுப்பண்புகள் :
* இந்த மரம் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது, கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக சீராக அடுக்கியது போல் குடை வடிவத்தில் அழகாக இருக்கும்.
* இது ஒரு இலையுதிர் மரமாகும், வருடத்தில் இருமுறை இலைகளை உதிர்த்துவிடும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் பெரிய இலைகளாக இருக்கும், நாளாக நாளாக மஞ்சள் நிறத்திற்கு மாறி பின் சிவப்பு நிறமாகி உதிர்ந்துவிடும். மரத்தைச் சுற்றி காய்ந்த இலைகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
* இது Bisexual flower என்று சொல்லக்கூடிய ஆண் மலரும் பெண் மலரும் ஒருங்கே ஒரே மரத்தில் பூக்கக்கூடிய மரவகையைச் சார்ந்தது. இதனுடைய பழம் சிறியதாக கூர்மையான முட்டை வடிவத்தில் இருக்கும். பச்சை நிறத்தில் காயாக இருந்து மஞ்சள் நிறந்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை கொண்ட பழமாக மாறி கீழே விழுந்துவிடும் அல்லது அதுவே சிவப்பு நிறமாகியும் கீழே விழும்.
* விழுந்த பழத்தின் மேலே உள்ள சதைப்பகுதி காய்ந்து அதனைக் கொட்டினால் உள்ளே ஒரு பருப்பு இருக்கும், அது தான் உண்மையான பாதாம் பருப்பை போல ருசியிருக்கும், அதனால் தான் இந்திய பாதாம் என்ற பெயர் வந்தது.
* ஒரு சில மரங்களின் பழம் பச்சையாக இருந்து நேரடியாக காவி நிறத்தில் மாறி காய்ந்து கீழே விழுந்துவிடும்.
பயன்கள் :
* இந்த மரத்தில் பெரிய இலைகளும், சீரான கிளைகளும் இருப்பதால் அடர்த்தியாக நிழல் தருகின்றது, மாடு கட்டும் தொழுவத்தில் (பட்டியில்) வேப்பமரம், புளிய மரத்துடன் இந்த மரத்தையும் வளர்க்கலாம்.
* இந்த மரத்தின் வேர்கள் நன்றாக மண்ணோடு இருகி மண் அரிப்பை தடுக்கவல்லது. எனவே இதனை நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில், ஆற்றோரங்களில் வளர்க்கலாம்.
* பார்ப்பதற்கு குடை வடிவத்தில் அழகாக இருப்பதால் பெரிய தோட்டம் அல்லது பூங்கா அமைப்பவர்கள் இந்த மரத்தை கட்டாயம் தேர்ந்தெடுப்பர்.
* இந்த மரத்தின் இலைகள் கீழே விழுந்து காய்ந்த பிறகு அதனை மீன் தொட்டியுனுள் போட்டால் மீன் நன்றாக வளர்வதாக கூறப்படுகிறது.
* இந்த மரத்தின் பட்டைகளையும் இலைகளையும் பயன்படுத்தி சாயம் தயார் செய்யப்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* இந்த மரம் விதைகள் மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
* நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
* விதையின் முளைப்புத்திறன் 20-25 சதவீதமாகும்.
* விதைகளை குளிர் நீரில் 24 மணி நேரம் ஊரவைத்து விதைக்க வேண்டும்.
* விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. 3 - 4 மாத நாற்றுகள் நடவுக்கு ஏற்றது.
* பருவ மழை சமயத்தில் 3 x 3 மீட்டர் இடைவெளியில் நாற்றுகள் நடவேண்டும்.
* நடப்பட்டு 3 வருடங்கள் வரை களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
* 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை