* மரத்தின் பெயர் : அகத்திமரம்

            * தாவரவியல் பெயர் : செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா

            * ஆங்கில பெயர் : Vegetable Hummingbird, Hummingbird tree

            * தாயகம் : மலேசியா

            * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

            * தாவர குடும்பம் : பபேசியே

பொதுப்பண்புகள் :

            * அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப்படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது.

            * நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும்.

           * இலைகள் 15 - 30 செ.மீ. நீளம் உடையது.

           * ஒரு இலையில் 40 - 80 சிறு இணுக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 - 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்துவார்கள்.

           * இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும்.

           * விதை 8 மி.மீ. நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா.

           * பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

பயன்கள் :

            * அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

             * அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

              * அகத்தி பட்டையிலிருந்து உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.

              * அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

              * வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. அகத்தி கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும். அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

வளர்ப்பு முறைகள் :

              * தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.

              * களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

              * சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.

             * விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.

             * தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

             * இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.

             * செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

             * இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

            * அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அகத்திமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை