* மரத்தின் பெயர் : அலிஞ்சில் மரம்
* தாவரவியல் பெயர் : அலாஜ்ஜியம் சால்விபோலியம்
* ஆங்கில பெயர் : Sage-leaved alangium
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரங்கள்
பொதுப்பண்புகள் :
* வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இலையுதிர் மரமாகும்.
* 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வளரக்கூடிய மரமாகும்.
* கடல் மட்டத்திலிருந்து 750 மீ உயரம் வரை வளரக்கூடியது.
* சாம்பல் நிற சொரசொரப்பான மரப்பட்டைகளையும் இளம் கிளைகள் இளஞ்சிவப்புக் கலந்த சாம்பல் நிறத்தை கொண்டிருக்கும்.
* இலைகள் அடுத்தடுத்து அமைந்த ஆரஞ்சு நிற இருபால் மலர்களைக் கொண்டிருக்கும்.
* காய் பெர்ரி வகையைச் சேர்ந்த நீள நிறத்திலும், கொலகொலப்பான திரவத்தில் மூடிய விதைகளைக் கொண்டிருக்கும்.
பயன்கள் :
* இந்த மரம் இசைக்கருவிகள் தயாரிக்க பயன்படுகிறது.
* கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கும், அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* இம்மரத்தின் வேர் மருத்துவகுணம் கொண்டவை.
* இதன் விதையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம்.
* குச்சி பல் துளக்க, பட்டைகள் அலங்கார பயன்பாட்டுக்கு உதவுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* நேரடி நடவு முறை, நற்றங்கால் விதைப்பு மூலம் நடவு செய்யப்படுகிறது.
* ஜூன்-ஆகஸ்டு மாதம் விதைகள் சேகரிக்கப்பட்டு காயவைக்கப்படுகிறது.
* விதை குறைந்த அளவு முளைப்பு திறன் கொண்டவை.
* குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்பட்ட பிறகு விதைகள் நேரடியாக மணல் மற்றும் எரு அடங்கிய பாலீத்தின் பைகளில் விதைக்கப்படுகிறது.
* நாற்று இரண்டு இலைகள் வளர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பபட்ட பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும்.
* 6-12 மாதமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றது.
* ஈரமான பகுதியில் குழியின் அளவு 30 கன செ.மீ ஆக இருக்க வேண்டும். வறண்டப் பகுதியில் குழியின் அளவு 45 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.
* கன்று நட்டப் பிறகு உயிரைத் தக்க வைக்க தண்ணீர் விட வேண்டும்.
* வளமான மண், நீர் வளம் கொண்டப் பகுதியில் நல்ல மகசூல் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை