* மரத்தின் பெயர் : நாவல் மரம்

           * தாவரவியல் பெயர் : சிசிஜியம் கியூமினி

           * ஆங்கில பெயர் : Java Plum, Malabar Plum, Black Plum

           * தாயகம் : இந்தியா மற்றும் இந்தோனீசியா

           * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : மிர்டேசி

           * மற்ற பெயர்கள் : அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம்

பொதுப்பண்புகள் :

             * நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்.

             * இது மிர்தாசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது.

            * இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

            * சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு. இந்த மரம் சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது.

            * நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.

             * நாவல் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும்.

பயன்கள் :

            * நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும்.

             * ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

             * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு.

             * நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

             * நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

             * இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.

             * கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

வளர்ப்பு முறைகள் :

            * இது ஒரு நீண்ட நெடுமரம். இதன் இலையுதிர் காலமானது குறுகிய காலமான பிப்ரவரி முதல் மார்ச் வரை.

           * இம்மரமானது நல்ல வடிகால் வசதி உள்ள மண்ணில் நன்றாக வளரும். கடினமான மண்வகைகள் கூட சாகுபடிக்கு உகந்தவை.

           * இது ஒரு பசுமையான மரம். வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

           * கடல் மட்டத்திலிருந்து சுமார் 800 கி.மீ, உயரமுள்ள மலைச்சரிவுகளில் பயிர் செய்யப்படுகிறது.

           * இம்மரமானது விதை மூலம் பயிர் செய்யப்படுகிறது.

           * விதையின் முளைப்புத்தன்மை 3 முதல் 4 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். இதனால் முளைப்புத்திறனானது மூன்று மாத விதைக்கு 60 சதவீதம் மட்டுமே பெறப்படும். இதற்காக விதையை நன்றாக தண்ணீரில் ஊறவைத்து தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.

          * 6 மாத நாற்றுகள் நடுவதற்கு ஏற்றதாகும். அவற்றை 2 X 2 மீ இடைவெளியில் 1X1 அடி குழியில் நடவேண்டும்.

          * செழிப்பான 11 முதல் 12 மாத செடிகளிலிருந்து தூர்கள் பிரித்தெடுக்கப்பட்டு நேரடியாக வயலில் நடப்படுகின்றன.

          * முதல் வருடத்தில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். இரண்டாமாண்டு முதல் ஒரு முறை களையெடுத்தல் போதுமானது.

           * ஐந்தாமாண்டில் இடையே உள்ள மரங்களை நீக்க வேண்டும். இம்மரங்கள் 40 முதல் 50 ஆண்டுகள் வரை இரண்டாமாண்டு முதல் ஒரு முறை களையெடுத்தல் போதுமானது. வளர்ந்து பலன் தரவல்லது.

           * நட்ட 6 அல்லது 7 ஆண்டுகளில் பூத்துகாய்க்க ஆரம்பிக்கும். மண் வளத்துக்கேற்ப 100 ஆண்டுகள் வரை சீரான மகசூலைத் தரும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் ஆகியவை தளிர்களையும் இலைகளையும் உண்ணும்.

              * மேலும் சாறு உறிஞ்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

              * மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான பஞ்சகாவ்யா அல்லது வேம்புபால் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நாவல் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை