* மரத்தின் பெயர் : சித்தகத்தி மரம்
* தாவரவியல் பெயர் : செஸ்பேனியா செஸ்பென்
* ஆங்கில பெயர் : Sesban, Egyptian rattlepod, Egyptian riverhemp
* தாயகம் : எகிப்து, கென்யா, உகாண்டா
* மண் வகை : வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : பபேசியே
* மற்ற பெயர்கள் : கருஞ்செம்பை, செம்பை
பொதுப்பண்புகள் :
* இது ஒரு குறுவகை மரமாகும் மற்றும் எகிப்திய சணல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும்.
* இது ஒரு மூலிகைச் செடி. இதன் பூக்களும், இலைகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
* இந்த குறுமரம் விரைவாக வளரும் தன்மை உடையவை.
* ஆறு மாதத்தில் மரமாகிவிடும். நான்கு மாதத்தில் பூ பூக்கும்.
* விதைகள் விழுந்த இடம் எல்லாம் செடி முளைக்கும்.
பயன்கள் :
* வயல்களில் இந்த விதைகளை விதைத்தால், இரண்டு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும்.
* பிறகு அதை அப்படியே மடக்கி உழுது விட்டு, நெல் நடவு செய்யலாம். அதாவது நல்ல உரமாகவும் பயன்படுகிறது.
* ஒருதலைவலி அல்லது சாதாரண தலைவலிக்கு இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை