* மரத்தின் பெயர் : சப்போட்டா மரம்
* தாவரவியல் பெயர் : மனில்காரா சப்போட்டா
* ஆங்கில பெயர் : Sapota Tree, Sapodilla Tree
* தாயகம் : மெக்சிகோ, அமெரிக்கா, கரிபியன்
* மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : சப்போட்டேசியே
* மற்ற பெயர்கள் : சீமை இலுப்பை, புல்லி, சிக்கு
பொதுப்பண்புகள் :
* சப்போட்டா சுவையான பழம் தரும் மரம்.
* இதனை கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம்.
* சப்போட்டாவில் கோ 1,2,3, பி.கே.எம் 1,2,3,4,5, கிரிக்கெட் பால், ஓவல் பாராமசி, தகரக்குடி, கீர்த்தபாரத்தி, பாலா, காளிப்பட்டி, மற்றும் துவாரப்புடி ஆகிய ரகங்கள் உள்ளன.
* இருப்பினும் பிரபலமான ரகங்கள் என்றால் பி.கே.எம் 1,2,3, கோ 1,2, கிரிக்கெட் பால் மற்றும் கீர்த்தபாரத்தி ஆகியவை ஆகும்.
* சப்போட்டா சாதாரணமாக வருடத்தில் இரண்டு முறை காய்க்கும். சில ரகங்கள் வருடம் முழுவதும் காய்க்கும். பி.கே.எம் ரகங்களை விட கிரிக்கெட் பால் ரகம் சற்று குறைவாக தான் காய்க்கும்.
பயன்கள் :
* சப்போட்டா இரும்பு சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் என்பதால் வயிற்று புண்களை ஆற்றும் சக்தி கொண்டவை. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டது.
* புரோட்டின், இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.
* வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும்.
* கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமானத்துக்கும் உதவுகிறது.
* சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
வளர்ப்பு முறைகள் :
* கன்றுகள் பொதுவாக ஆடி மாதத்தில் நடவு செய்யப்படுகின்றன. பாலா வேர் செடியில் ஒட்டு கட்டிய 2 அல்லது 3 கிளைகளைக் கொண்ட ஒட்டுச் செடிகள் நடவுக்கு ஏற்றவை ஆகும்.
* நடவுக்கு 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உடைய குழிகள் எடுக்க வேண்டும். 20-க்கு 20 அடி இடைவெளியில் நடப்படுகின்றன.
* நடவு குழியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் தொழுவுரம் ஆகியவற்றை இட்டு நடவு செய்ய வேண்டும்.
* கன்றுகள் காற்றில் ஆடாமல் இருக்க குச்சிகளை நட்டு கட்டி விடலாம். இதன் மூலம் வேர் வளர்ச்சி சீராக இருக்கும்.
* பூ பூக்கும் சமயத்தில் மீன் அமிலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தெளிப்பதன் மூலம் பூ உதிர்வதை தடுத்து, அதிகப்படியான பூக்கள் மற்றும் பழங்கள் பெறலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* கரிப்படலம் நோய் ஒரு பூஞ்சான் நோய் ஆகும். சப்போட்டா இழையின் மேல் இது படர்ந்து இருக்கும். இதனால் ஒளிச்சேர்க்கை தடுக்கப்படும்.
* இதை கட்டுப்படுத்த 4 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு கிலோ மைதாவை கலக்க வேண்டும். பின்னர் அதை தெளிக்க வேண்டும். அல்லது கற்பூர கரைசல் தெளிக்கலாம்.
* இலை சுருட்டுப் புழு, மொட்டுப் புழு, கம்பளிப் புழு ஆகியவை தாக்கும். இதற்கும் 200 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கரைசல் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது கற்பூர கரைசல் தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை