* மரத்தின் பெயர் : இலவம் மரம்

           * தாவரவியல் பெயர் : சீபா பெண்டண்ட்ரா

           * ஆங்கில பெயர் : Silk Cotton Tree, Java cotton tree

           * தாயகம் : ஆப்பிரிக்கா

           * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : மால்வேசியே

பொதுப்பண்புகள் :

             * அதிக செலவு செய்யாமல் பணம் மட்டும் தரும் மரங்களை தேர்வு செய்து விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட பலரும் முனைகிறார்கள். இவற்றில் முக்கியமானது இலவம் பஞ்சு மரம். இம்மரங்களை வீட்டில் அல்லது தோட்டத்தில் உள்ள சிறிது இடத்தில் வளர்த்தால் போதும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கை மேல் பலன் கிடைக்கும்.

            * இவ்வகை மரங்களை சில்க் காட்டன், சிங்கப்பூர் கப்பாக், இலவன், ஒலவன், பஞ்சு மரம் என்றும் அழைக்கிறார்கள். அற்புத பஞ்சு மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

            * பல இடங்களில் எளிதில் வளர்க்க உகந்த ஒன்று தான்.

            * அதிக நிழல் தராத தன்மை உடைய இலவம் மரம் எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

பயன்கள் :

              * இலவம் பஞ்சுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளதால் வருமானம் அதிகளவில் கிடைக்கிறது. குறைந்த பரப்பிலே சாகுபடி செய்யப்பட்டு வருவதால் எப்போதும் தேவை இருந்து கொண்டே உள்ளது.

             * இதன் பஞ்சிலிருந்து மெத்தை, தலையணைகள் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

            * அதுமட்டுமல்லாமல் அதன் விதைகள் எண்ணெய், சோப் தயாரிப்பிலும், அதன் சருகுகள் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

            * குறைந்தபட்சம், 25 ஆண்டுகள் கழித்து காய்ப்பு குறைவான சமயத்தில் மரங்களை வெட்டி, பலகை தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

            * வாழைமரம் போன்று இலவம் பஞ்சு மரத்தின் அனைத்து பாகங்களுமே விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதாக உள்ளது.

            * நீண்ட கால பயிர்கள் என்பதால் இவற்றில் பல்வேறு வகையான ஊடுபயிர்களையும் சாகுபடி செய்து இரட்டை வருமானம் பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

வளர்ப்பு முறைகள் :

              * குறைவான சாகுபடி செலவு, குறைந்தளவிலான தண்ணீர் மற்றும் பராமரிப்பில் குறைவில்லா வருமானம் ஈட்டுவதற்கு இலவம்பஞ்சு மரம் சாகுபடியே சிறந்தது.

             * அனைத்து பயிர்களை போன்று இவையும், விதை மூலமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. போத்து வகையிலும் சாகுபடி செய்யலாம்.

             * விதையைவிட, போத்து மூலம் நடவு செய்யப்படும் மரங்கள் குறுகிய காலங்களிலே அறுவடைக்கு தயாராகிறது.

            * ஒவ்வொரு மரத்துக்கும், 15 முதல் 20 அடி இடைவெளி இருக்கும் வகையில் ஏக்கருக்கு, 150 மரங்கள் வரை நடவு செய்யப்படுகிறது.

           * போத்து மூலம் நடவு செய்யப்படும் மரங்களில் அதிகளவிலான கிளைகள் முளைக்கும். அவற்றில் தரமான இரண்டு கிளைகளை மட்டும் வைத்துவிட்டு அனைத்தையும் கிள்ளிவிட வேண்டும்.

          * அதே போன்று ஒவ்வொறு கிளை படர்விலும் அதே முறையை பின்பற்றினால் விளைச்சல் சிறப்பாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

          * நல்ல வடிகால் வசதியுடைய மண் ஏற்றதுடன் நன்கு வறட்சியை தாங்கி வரக்கூடிய தன்மையுள்ளது. இதற்கு காற்றிலும் ஈரப்பதத்தினை எடுத்துக்கொண்டு சிறப்பான வளர்ச்சியை பெறுகிறது.

           * கோடைகாலத்தில் அதிக வறட்சி நிலவுவதால் அப்போது மட்டும் குறைந்தளவு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும்.

           * ஆண்டுக்கொருமுறை காய்க்கும் இம்மரங்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அறுவடை செய்யப்படுகிறது.

           * ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம், 800 காய்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய்கள் நன்கு காய்ந்த பின்பே அறுவடை செய்யப்படுகிறது.

நோய் தடுக்கும் முறைகள் :

              * பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லை என்பதால், பராமரிப்பு செலவு முற்றிலும் குறைவு. அவ்வப்போது தேவையில்லாத கிளைகளை மட்டுமே கவாத்து செய்ய வேண்டும்.

இலவம் மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை