* மரத்தின் பெயர் : அத்திமரம்
* தாவரவியல் பெயர் : பைகஸ் குளோமரேட்டா
* ஆங்கில பெயர் : Fig Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : களிமண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மோரேசியே
* மற்ற பெயர்கள் : அதவம்
பொதுப்பண்புகள் :
* பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்தி. அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர்.
* விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும்.
* ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.
* ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
* அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும்.
* இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது.
* மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
* அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.
* பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
* அத்திப் பழம் நல்ல மணமாக இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
பயன்கள் :
* அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன.
* தினசரி 2 பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.
* உண்ட உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து பித்தத்தை வியர்வையாக வெளியேற்றி உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
* வெண்புள்ளிகளைக் குணமாக்க அத்திப்பழத்தைப் பொடி செய்து பன்னீரில் கலந்து பூச வேண்டும்.
* சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் உதவுகிறது.
* அத்தி பழங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உஷ்ணத்தை குறைத்து மூல நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
* இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள் தயாரிக்க, கரண்டி மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன.
* தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.
* அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
* சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.
* விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
* தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
* செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.
* அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
* நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவல்லது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை