* மரத்தின் பெயர் : குருந்த மரம்

           * தாவரவியல் பெயர் : பேம்புரூஸ் மிஷனிஸ்

           * ஆங்கில பெயர் : Wild Orange

           * தாயகம் : இந்தியா

           * மண் வகை : ஆற்றோரங்களில் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : ரூடேசி

           * மற்ற பெயர்கள் : காட்டுநாரத்தை, கடா நாரத்தை, காட்டு எலுமிச்சை, காட்டு நாரங்கம், காட்டு கொளுஞ்சி

பொதுப்பண்புகள் :

             * குருந்த மரம் நாரத்தை வகையைச் சேர்ந்த முள்ளுடைய சிறிய மரம்.

             * இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். வெண்ணிற மலர்களையும், உருண்டையான காய்களையும், தண்டில் முள்ளும் உள்ள மரமாகும்.

              * இதன் இலைகள் பச்சை மற்றும், வெளிறிய வெள்ளை நிறம் கலந்தது போல் காணப்படுகிறது.

             * இந்த மரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்க்கும்.

            * உயரம் : 6 மீட்டர்.

பயன்கள் :

            * குருந்த மரத்தின் இலைகள், பட்டைகள் பல நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

            * இந்த மரங்கள் மூலம் எலும்புமுறிவு, பாம்புக்கடி, ஆசனவாய் வெடிப்பு போன்ற நோய்களைத் தீர்க்கலாம்.

            * மேலும் தாய்மார்களுக்கு ஏற்படும் உடல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்க இந்த மரத்தின் கட்டைகள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

           * குருந்தை மரங்களை கட்டைமரமாக கூட பயன்படுத்தலாம்.

           * நடுத்தரமான கடினத்தன்மை உடைய மரம் எனவும் இந்த மரத்தை குறிப்பிடலாம். எனவே பலவகையான மரவேலைகளுக்கும் இதனை பயன்படுத்த முடியும்.

           * மேலும் நாற்காலி போன்ற மரச் சாமான்கள் மற்றும் பொருட்களைப் பேக்கிங் செய்யும் மரப்பெட்டிகள் ஆகியவை செய்ய ஏற்றவை.

           * இதன் பழத்திலிருந்து எடுக்கும் எண்ணெய் கடுமையான மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றைக் குணமாக்க பயன்படுகிறது.

           * கைகால் வீக்கம், எலும்பு முறிவு ஆகியவற்றை இந்த மரத்தின் இலைச்சாற்றினைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

           * இலைகளில் தயாரிக்கும் கஷாயத்தை மருந்தாகக் கொடுத்து, பிரசவம் ஆன உடலில் உள்ள வெப்பத்தைக் குறைத்தல், பசியைத் தூண்டுதல் போன்றவற்றிற்கும் இந்த மரம் ஒரு தீர்வை அளிக்கிறது.

வளர்ப்பு முறைகள் :

             * குருந்த மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

            * ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

             * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 25-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.

             * 75-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

              * மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம். பின்னர் 4-5 ஆண்டுகளில் இந்த மரம் பலன் தர ஆரம்பிக்கும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * இதில் நோய் தாக்குதல் குறைவு.

              * இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.

             * கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் தெளித்து விடலாம்.

குருந்த மரம் | பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை