* மரத்தின் பெயர் : சென்னா மரம்
* தாவரவியல் பெயர் : சென்னா சையாமியா
* ஆங்கில பெயர் : Cassia tree, Cassod tree
* தாயகம் : ஆசியா
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பபேசியே
* மற்ற பெயர்கள் : அவுரி, நிலாவாரை மற்றும் நிலாவக்காய்
பொதுப்பண்புகள் :
* சென்னா ஒரு பசுமை மாறா மரமாகும். இது அகன்ற கிளைகளுடன், மென்மையான சாம்பல் நிறமுடைய பட்டையை கொண்டது.
* இந்தமரத்தின் இலைகள் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
* விதைகள் பீன்ஸ் வடிவத்திலும், சாம்பல் நிறத்திலும் காணப்படும்.
* சென்னா மரம் வளரும் நிலத்தில் காரத்தன்மை 7-8.5 வரை இருக்க வேண்டும்.
* இந்த மரம் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது.
* கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலங்களில் இம்மரம் வளரும்.
* இது வறட்சியை தாங்கி வளரும். ஆனால் வெப்பம் மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வளராது.
பயன்கள் :
* சென்னா மரம், சாலையோரங்கள், தேயிலை தோட்டங்கள் போன்ற இடங்களில் காற்றுத் தடுப்பானாக வளர்க்கப்படுகிறது.
* வரப்போரங்களில் மண் அரிமானத்தை தடுக்க வளர்க்கப்படுகிறது.
* மேலும் இதன் இலைகள் பசுந்தாழ் உரமாக பயன்படுகிறது.
* மரத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் தோல் பதனியிடும் பொருள் மருத்துவத்தில் சென்னா இலை, இலைத்தூள், அதன் விதை மற்றும் ஒவ்வொன்றின் பொடிகள் மருந்தாகவும், டீ தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன.
* சருமத்தில் ஏற்படும் சிரங்குகள், மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.
* இரத்தக் கொதிப்பக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* சென்னா மரம் நேரடி விதைப்பு மூலமாகவும், நாற்றங்கால் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றது.
* விதைகள் 3 வருடம் வரை முளைப்பு தன்மையை பெற்றிருக்கும் தன்மை கொண்டது.
* விதைகள் ஏப்ரல் - மே மாத இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
* நாற்றுகள் இரண்டு துளிர்கள் வந்த பிறகு நாற்றுகள் துளிர்ந்த பிறகு பாலித்தீன் பைகளுக்கு மாற்றி வைத்து கொள்ளலாம்.
* 6 மாதமான நாற்றுகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
* மரக்கன்றை 30 செ.மீ ஆழக் குழி எடுத்து நடவு செய்யலாம்.
* மரங்களுக்கு இடையிலான இடைவெளி 3 x 3 மீ இருக்க வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* சென்னா மரத்திற்கு அவ்வபோது களை எடுத்தல், உழுதல் போன்றவை அவசியமானதாகும்.
* மேலும் இதர விலங்குகளிடமிருந்து மரத்தை பாதுக்காக்க வேலி அமைத்து கொள்ளலாம்.
* 7-10 வருடங்களில் இந்த சென்னா மரம் பலன் தரும்.
கருத்துகள் இல்லை