* மரத்தின் பெயர் : பீனாரி மரம்
* தாவரவியல் பெயர் : அய்லாந்தஸ் எக்செல்சா
* மண் வகை : செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் வளரும் மரம்
பொதுப்பண்புகள் :
* இந்த மரமானது மிகப் பெரிய அளவில் வளரக்கூடியது. கடல் மட்ட உயரத்தில் 300 மீட்டர் வரை வளரக்கூடியது.
* இம்மரத்தின் அடிப்பகுதி பருத்து தடிமனாக காணப்படும்.
* இதனுடைய பூக்கள் பச்சை நிறத்துடன் கூடிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* இந்த மரத்தின் விதையானது பழுப்பு நிறத்துடன் கூடிய சிவப்பு நிறமுடையது. இதில் ஒரு நெற்றுக்கு 1-5 விதைகள் இருக்கும்.
பயன்கள் :
* இவை வேகமாக வளரும் தன்மை கொண்டதால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தோட்ட பயிராக பயிரிடப்படுகிறது.
* இதில் அதிக மரங்கள் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
* இதன் மரம் கட்டுமரம், படகு தாயாரிக்கவும் மற்றும் பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* இதன் இலைகள் கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* இவைகள் விதைகள் மற்றும் வேர் கிழங்குகள் மூலமாகவும் இனபெருக்கமடையக்கூடியது. நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.
* விதைகளுக்கு முளைப்புத் திறன் குறைவு என்பதால் 3 மாதங்கள் மட்டுமே விதைகளை சேமித்து வைக்க முடியும்.
* ஜூலை முதல் அக்டோபர் மாத இடைவெளியில் நடவு பணிகளை மேற்கொள்ளலாம்.
* 6-10 மாத நாற்றுகளை 3 x 3 மீட்டர் மற்றும் 5 x 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்து கொள்ளலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* பண்ணை முழுவதும் களை எடுக்க வேண்டும்.
* ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மிக அவசியம்.
* இம்மரத்தினை 5-7 வருடங்களில் அறுவடை செய்யலாம்.
* நாற்றுகளை வேர் அழுகல் நோயிலிருந்து பாதுகாக்க அதிகப்படியாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை