* மரத்தின் பெயர் : ஊதா கொன்றை மரம்

            * தாவரவியல் பெயர் : கேசியா கிராண்டிஸ்

            * ஆங்கில பெயர் : Pink Cassia Tree, Java cassia Tree, Pink Shower Tree

            * தாயகம் : பிரேசில், மத்திய அமெரிக்கா

            * மண் வகை : களிமண்ணில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : பேபேசி

            * மற்ற பெயர்கள் : ஹார்ஸ் கேசியா, பிங்க் ஷவர், கேசி டு பிரெசில், கேசி, கிரீட்டி, பிராய் சியம், ரோசன் கேசியா

பொதுப்பண்புகள் :

             * ஊதா கொன்றை ஒரு அழகிய பூமரம். இந்த மரம் அதிகபட்சமாக 30 மீட்டர் உயரம் வளரும் தன்மையுடையது.

             * இதன் விதைகள் கடினமானவை. விதையை ஊறவைத்தே விதைக்க வேண்டும். கிளைகள் மூலமும் இந்த மரத்தை இனப்பெருக்கம் செய்யலாம்.

             * காய்கள் முற்றிய பிறகு, ஒவ்வொரு காயிலும் சராசரியாக 40 முதல் 55 விதைகள் இருக்கும்.

             * இந்த மரத்தின் சிறப்பம்சமே அதனில் பூக்கும் பூக்கள்தான். பூக்கள் நீளமான சரங்களாகப் பூக்கும்.

             * ஒவ்வொரு பூவும் 3 செ.மீ. அளவு மலரும். பூக்களின் வெளிப்புற இதழ்கள் பிங்க் லேவண்டர் வண்ணத்திலும், உட்புற இதழ்கள் ஊதாமஞ்சள் வண்ணத்திலும் பூக்கும்.

பயன்கள் :

             * ஊதா கொன்றை மரத்தின் பழச்சாறு இரத்தத்திற்குத் தேவையான, இரும்புச்சத்தைத் தந்து, ரத்தச் சோகையை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

             * இந்த மரத்தின் இலைச்சாறு, இடுப்பு வலியைக் குணப்படுத்துவடன் படர்தாமரையைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தது. மேலும் தோல் நோய்களையும் குணப்படுத்தும்.

             * இந்த மரத்திலிருந்து பிசின் தயாரிக்கலாம். இந்த மரத்தின் சாம்பல் சோப்பு தயாரிக்க உதவுகிறது.

             * இதன் மரங்கள், எல்லாவித மரவேலைகளுக்கும் கட்டிடம் கட்ட வேளாண்மைக் கருவிகள் செய்ய, வேலிகள் அமைக்க கம்புகளாகவும், அடுப்பெரிக்க விறகாகவும் பயன்படுகிறது.

ஊதா கொன்றை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை