* மரத்தின் பெயர் : நீர்க்கடம்ப மரம்

              * தாவரவியல் பெயர் : மித்ரகைனா பார்விஃபோளரா

              * ஆங்கில பெயர் : Kadam, Kaim Tree

              * தாயகம் : இந்தியா

              * மண் வகை : ஆழமான மற்றும் நீர் தேங்காத மண்ணில் வளரும் மரம்

              * தாவர குடும்பம் : ரூடேசி

              * மற்ற பெயர்கள் : கடம்பை, சின்னகடம்பு, கட்டம் கம்கி, கோங்கு, கடசா, விட்டநா, குலிகடம், கலாம்

பொதுப்பண்புகள் :

              * நீர்க்கடம்பை மரம் ஒரு இலையுதிர் மரம்.

              * நீர்க் கடம்பை மரம் விதை, நாற்று, வேர்க்குச்சி போன்றவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

              * இதன் விதை மிகவும் நுண்ணியதாக இருக்கும்.

              * சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.

              * மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

              * பூக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது மற்றும் மணமுடையது.

பயன்கள் :

              * மஞ்சள்காமாலை நோயைக் குணப்படுத்த நீர்க்கடம்பையின் இலைச்சாறு பயன்படுகிறது.

              * உடலின் உள்ள காயங்கள், புண்கள் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றால் ஏற்படும் வலி ஆகியவற்றைக் குணப்படுத்த இதன் இலைச்சாறு பயன்படுகிறது. மேலும் காய்ச்சலையும் குணப்படுத்தும்.

              * இந்த மரம் மூட்டுவலியை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

              * நீர்க் கடம்பையின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

              * இந்த பட்டை டேனின் நிறைந்து காணப்படுவதால், தோல் பதனிட பயன்படுகிறது.

             * இந்த மரத்திலிருந்து பல விதமான கருவிகள், விளையாட்டு சாமான்கள், தீக்குச்சிகள் செய்யலாம்.

             * காகிதம் தயாரிக்க இந்த மரத்தின் மரக்கூழ் பயன்படுகிறது.

             * இந்த மரம் எளிதில் அரிக்கப்படாததால் பலவிதமான பொருள்கள் செய்ய ஏற்றது.

             * மரங்கள் வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, அதிலுள்ள தூசிகளை தூய்மைப்படுத்தும் திறன் கொண்டது.

             * இதன் மரப்பட்டையானது நார் தயாரிக்க பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

              * நீர்க்கடம்பை வறண்ட பகுதிகளில் வளர்ந்தாலும், அதிக நீர் இருக்கும் கரிசல் மண்ணில் தான் நன்கு வளரும்.

             * இதற்கு ஆழமான மண்கண்டம் உடைய பகுதிகள் ஏற்றவை. வடிகால் வசதியில்லாத இடங்களிலும் நன்கு வளரும்.

             * மரத்திலிருந்து நெற்றுகள் வெடிப்பதற்கு முன்பாகவே, நெற்று தலைகளை பறித்து வெயிலில் உலர்த்த வேண்டும்.

             * அதிலிருந்து விதைகள் உதிர்ந்துவிடும். பின்னர் விதையை தனியாக பிரித்து உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும்.

            * ஒரு கிலோகிராம் எடையில் 10,000 விதைகள் இருக்கும்.

            * விதைகளை துணிப்பையில் வைத்து உலர்த்தி, பின் நாற்று விட வேண்டும்.

            * இதன் முளைப்புத்திறன் 50-60 சதவீதம் வரை இருக்கும்.

            * விதைத்த 2-3 மாதத்தில் கன்றுகள் உருவாகிவிடும். அதை தேவையான இடத்தில் எடுத்து நடவு செய்யலாம்.

            * நாற்று குச்சிகள் தயாரித்தும் இந்த மரத்தை நடவு செய்யலாம்.

             * நடவு இடைவெளி : 3 x 3 மீட்டர்

            * முதலில் நிழல் உள்ள இடங்களில் நடவு செய்து, பின் சூரிய ஒளி கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

            * நட்டபின் இரண்டாவது ஆண்டிலிருந்து வளர்ச்சி துரிதமாக இருக்கும்.

           * கலையெடுத்தல் மற்றும் உழுதல் மர வளர்ச்சிக்கு உதவுகின்றது.

நோய் தடுக்கும் முறைகள் :

               * இந்த மரத்தில் நோய் தாக்குதல் என்பது மிகக்குறைவு. எனவே அதிக பராமரிப்பு என்பது தேவைப்படாது.

நீர்க்கடம்ப மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை