* மரத்தின் பெயர் : மலைவேம்பு
* தாவரவியல் பெயர் : மீலியா டூபியா
* ஆங்கில பெயர் : Malai Vembu
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மிலியேசியே
பொதுப்பண்புகள் :
* சராசரியாக 15 மீ. வரை உயரமாக வளரக்கூடிய மரம். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டுள்ள தாவரமாகும்.
* வேம்பு இலைகள், இறகு வடிவமானவை, பல சிற்றிலைகளைக் கொண்டவை, ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும்.
* வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.
* வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5 செ.மீ. வரை நீளமானவை, மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
* வேம்பு முதன் முதலில் இந்தியாவில் தோன்றியது. இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம்.
* வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.
பயன்கள் :
* வேம்பு மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தியை உடையது.
* மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது.
* இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால், வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம், பூ, இலை, இலையின் ஈர்க்கு, வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
* வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம்.
* வேப்பம்பூவானது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம், வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.
* வேப்ப இலை புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
* வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும். வேப்பிலைச் சாறு பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
வளர்ப்பு முறைகள் :
* வேம்பு இந்தியாவின் எல்லா இடங்களிலும் கடற்கரை ஒரங்களை தவிர்த்து மிதமான மழை பெய்யும் இடங்களில் வளரும் ஒரு எண்ணெய் வித்து மரமாகும்.
* இது ஒரு நீண்ட நெடுமரம். இதன் இலையுதிர் காலமானது குறுகிய காலமான பிப்ரவரி முதல் மார்ச் வரை.
* இம்மரமானது நல்ல வடிகால் வசதி உள்ள மண்ணில் நன்றாக வளரும். கடினமான மண்வகைகள் கூட சாகுபடிக்கு உகந்தவை.
* இது ஒரு பசுமையான மரம். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆண்டு சராசரி மழையளவு 70 செ.மீ. இருந்தால் போதுமானது.
* கடல் மட்டத்திலிருந்து சுமார் 800 கி.மீ, உயரமுள்ள மலைச்சரிவுகளில் பயிர் செய்யப்படுகிறது.
* இம்மரமானது விதை மூலம் பயிர் செய்யப்படுகிறது.
* விதையின் முளைப்புத்தன்மை 3 முதல் 4 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். இதனால் முளைப்புத்திறனானது மூன்று மாத விதைக்கு 60 சதவீதம் மட்டுமே பெறப்படும். இதற்காக விதையை நன்றாக தண்ணீரில் ஊறவைத்து தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.
* 6 மாத நாற்றுகள் நடுவதற்கு ஏற்றதாகும். அவற்றை 2 X 2 மீ இடைவெளியில் 1X1 அடி குழியில் நடவேண்டும்.
* செழிப்பான 11 முதல் 12 மாத செடிகளிலிருந்து தூர்கள் பிரித்தெடுக்கப்பட்டு நேரடியாக வயலில் நடப்படுகின்றன.
* முதல் வருடத்தில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். இரண்டாமாண்டு முதல் ஒரு முறை களையெடுத்தல் போதுமானது.
* ஐந்தாமாண்டில் இடையே உள்ள மரங்களை நீக்க வேண்டும். இரண்டாமாண்டு முதல் ஒரு முறை களையெடுத்தல் போதுமானது. வளர்ந்து பலன் தரவல்லது.
* வேம்பு நட்ட 6 அல்லது 7 ஆண்டுகளில் பூத்துகாய்க்க ஆரம்பிக்கும். மண் வளத்துக்கேற்ப வேம்பு 8 முதல் 100 ஆண்டுகள் வரை சீரான மகசூலைத் தரும். எட்டு வயதிற்கு மேற்பட்ட வேப்ப மரத்திலிருந்து சராசரியாக 350 கிலோ தழையை பெறலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
இதில் நோய் தாக்குதல் இல்லை. இம்மரத்தில் இருந்து பெறப்படும் விதை, எண்ணெய், இலைகள் போன்றவையே பூச்சி விரட்டியாக உள்ளது.
கருத்துகள் இல்லை