* மரத்தின் பெயர் : அகில் மரம்
* தாவரவியல் பெயர் : பியாலோபோரா பிராக்டிகா
* ஆங்கில பெயர் : Agar Tree
* தாயகம் : தெற்காசியா
* தாவர குடும்பம் : தைமிலேசியே
* மற்ற பெயர்கள் : அகலி சந்தனம், அக்காலி சந்தனம், அகரு, அகர், கிருமிஜா, கிரிம்ஜக்தா, அனர்யகா, விஸ்வரூபகம், பிரவரா, ஜாங்ககம், ஷ;ரெக்டா வ்ருக்ஷh, ராஜர்கா, வம்ஷpகா, அகர்வுட், அலோஸ்வுட், ஈகிள்வுட்
பொதுப்பண்புகள் :
* பொதுவாக அகில் மரம் அகரு என்றே அழைக்கப்படுகிறது.
* இதில் 3 வகையான மரங்கள் உள்ளன. அவை கிருஷ்ண அகரு, கஷ்ட அகரு மற்றும் மங்களயா அகரு என்பவையாகும்.
* இந்த மரத்தை அம்ப்ரோசியா என்னும் வண்டுகள் அதிகம் தாக்குகின்றன. இதற்கு அகில் மரத்தின் பிசின்தான் பாதுகாப்பாக விளங்குகிறது.
* அகில் மரத்தின் வயிரம் மென்மையாக இருக்கும். வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த மென்மையான வயிர மரத்தை அகில் பிசின் கருமையாக மாற்றும்.
பயன்கள் :
* அனைத்துவிதமான மருத்துவத்திலும் இந்த அகில் பொருட்கள் மருந்துகளாக பயன்படுகின்றன.
* இந்த மரம் கல்லீரல் சம்மந்தமான நோய்கள், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய்கள், ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அகில் மரத்திலிருந்து எண்ணெயும் எடுக்கப்படுகிறது.
* அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு நன்கு சுண்டக்காய்ச்சி அதை குடித்துவர பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
* அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தினால் உண்டாகும் புகையை முக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்குள் இழுப்பதால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும்.
* அகில் கட்டியைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.
கருத்துகள் இல்லை