* மரத்தின் பெயர் : வில்வமரம்

           * தாவரவியல் பெயர் : ஏகிள் மர்மெலோஸ்

           * ஆங்கில பெயர் : Bael Tree

           * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : ரூடேசி

பொதுப்பண்புகள் :

              * வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.

             * வில்வ பட்டைகள் கடினமான முட்களைக் கொண்டது. ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம்.

              * வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும்.

             * வில்வ பூக்கள், 2.5 செ.மீ. குறுக்களவில், சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், இனிய மணத்துடன் காணப்படும்.

             * வில்வ பழங்கள், பெரியவை, 20 செ.மீ. வரை குறுக்களவானவை, கோள வடிவமானவை, முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

             * வில்வ பழத்தோல், கடினமானது, பழச்சதை ஆரஞ்சு நிறமானது. மணமும், சுவையும் கொண்டது.

             * வில்வம் இந்தியா முழுவதும், சமவெளிகள், மலையடிவாரங்களில் பரவலாக காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.

             * பல சிவன் கோயில்களில் இவை ஸ்தல விருட்சமாக வளர்கின்றன.

             * வில்வ இலை, சிவ வழிபாட்டின்போது உபயோகிக்கப்படும் மிக முக்கியமான அர்ச்சனைப் பொருளாகும். கூவிளம், கூவிளை, மாதுரம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு.

பயன்கள் :

             * வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

             * சிறுவர்களுக்கான சீத பேதி குணமாக வில்வம் பிஞ்சை நெல்லிக்காய் அளவு அரைத்து, 1 டம்ளர் மோரில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

             * மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாக வில்வ இலைகளை அரைத்து, பசையாக்கி, கொட்டைப் பாக்கு அளவு காலையில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நலம்.

             * சீதபேதி குணமாக நன்கு கனிந்த வில்வம் பழத்தை நீர்விட்டுப் பிசைந்து, நீரை வடிகட்டி, பின்னர், சம அளவாகச் சர்க்கரை கலந்து, தேன் சேர்த்து பதமாகக் காய்ச்சி, 30 மி.லி. அளவு சாப்பிட வேண்டும்.

             * மஞ்சள் காமாலை குணமாக ஒரு தேக்கரண்டி வில்வம் இலைத்தூளுடன், கரிசாலைச் சாறு சேர்த்து, குழப்பி காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 5 நாட்கள் வரை சாப்பிடலாம். இந்தக் காலத்தில் புளி, காரம் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

             * வில்வம் பழச்சதை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.

             * குடல்புண் மற்றும் குடல் புழுக்களால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வம் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி செய்கின்றன. பாதியளவு பழுத்த வில்வம் பழங்கள், பசியையும், ஜீரண சக்தியையும் அதிகமாக்குகின்றன.

             * வில்வ இலை, பழம், வேர் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வளர்ப்பு முறைகள் :

              * மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது.

              * பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை.

              * மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

                * இந்த மரத்தில் நோய் தாக்குதல் மிக குறைவு.

வில்வமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை