தேவையான பொருட்கள் :
* வாத்துக் கறி அரை கிலோ
* இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 4
* சோம்பு 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் 3
* சின்ன வெங்காயம் 15
* தக்காளி 3
* கறிவேப்பிலை 2 கொத்து
* கடலை மாவு கால் கப்
* தேங்காய் துருவல கால் கப்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
* கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
* அரிசி மாவு கால் டீஸ்பூன்
* ஆப்ப சோடா கால் டீஸ்பூன்
செய்முறை :
வாத்தை முதலில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மசாலா விழுதை சுத்தம் செய்து வெட்டி வைத்த வாத்துக் கறியுடன் கலந்து வைக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்கி அந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தௌpத்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக இருக்கும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள வாத்துக் கறியை கரைத்து வைத்துள்ள கடலை மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள வாத்துக் கறி துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை