தேவையான பொருட்கள் :

          * வாத்துக்கறி அரை கிலோ

          * வெங்காயம் 2

          * தக்காளி 2

          * பச்சை மிளகாய் 6

          * மிளகுத்தூள் 1 டீஸ்பூன்

          * இஞ்சி பூண்டு விழுது 6 டீஸ்பூன்

          * பிரியாணி இலை 2

          * மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்

          * உப்பு தேவைக்கேற்ப

          * எண்ணெய் தேவைக்கேற்ப

அரைக்க :

          * தேங்காய் துருவல் - கால் கப்

          * சீரகம் - 1 டீஸ்பூன்

          * வெங்காயம் - 4

          * கறிவேப்பிலை - 1 கொத்து

          * காய்ந்த மிளகாய் - 3

          * மல்லித் தூள் - அரை டீஸ்பூன்

          * தக்காளி - 1

          * பட்டை - 2

          * கிராம்பு - 2

          * சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை :

           வாத்தை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

            பின்பு வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

            கடாயில் எண்ணெய் விட்டு தேங்காயை பொன்னிறமாக வதக்கவும்.

            வதக்கிய தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயம், மல்லித்தூள், சீரகம் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

            பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

           வதக்கிய பிறகு வாத்துக்கறியை போட்டு நன்கு வதக்கவும்.

            கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து பச்சை வாசனை போனதும் இறக்கவும்.

            தேவைப்பட்டால் சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றலாம்.

             இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடலாம்.

வாத்துகறி குழம்பு செய்முறை

கருத்துகள் இல்லை