கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே வளர்ச்சியடையாமல் இறந்து போன கன்றுகளையும் அல்லது உயிருக்கு போராடும் கன்றுகளை மாடுகள் வீசுவதே கன்று வீச்சு ஆகும்.

                கால்நடைகள் கன்று வீசுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதன் காரணங்களை பற்றி இங்கு காண்போம்.

                நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரிகள் மூலம் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு கன்று வீச்சு ஏற்படுகிறது. இது ஐ.பி.ஆர் என்ற நச்சுயிரி (வைரஸ்) நுண்கிருமியால் ஏற்படும் நோயாகும். அதுமட்டுமல்லாமல் கருப்பையில் கனமாக அடிபடுதல், கருப்பை முறுக்கிக்கொள்ளுதல், ஓரே சமயத்தில் இரண்டு கன்றுகள் உண்டாதல் போன்ற பிரச்சனைகள் மூலமாகவும் கன்று வீச்சு ஏற்படுகிறது.

               நச்சுகளின் தாக்கமும் மாடுகளில் கன்று வீச்சினை ஏற்படுத்துகிறது.

               சினை மாடுகளில், கர்ப்பப்பையினை மருந்துகள் கொண்டு கழுவுதல், அல்லது சினையுற்றிருப்பது தெரியாமல் சினை ஊசி போடுதல் போன்றவையும் மாடுகளில் கருச்சிதைவினை ஏற்படுத்துகின்றன.

             வைட்டமின் ஏ, ஐயோடின், மற்றும் செலீனியம் சத்து குறைபாடுகளாலும் மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

                கால்நடைகள் சினைக்காலம் முடிவதற்கு முன்பாகவே பனிக்குடத்தினை வெளித்தள்ளுதல், பிறப்புறுப்பிலிருந்து அதிகப்படியான கோழை வடிதல் மற்றும் தீவனம் எடுக்காமை, சோர்வாக காணப்படுதல் மற்றும் தீடீரென கன்றினை ஈனுதல் இதன் அறிகுறியாகும்.

தடுப்பு முறைகள்

              கால்நடைகளில் இருந்து வீசப்படும் கன்றுகளை மற்றும் நஞ்சுக்கொடிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளின் நஞ்சுக்கொடி மற்றும் கருப்பையில் வெளியே திரவங்களால் மாசடையாமல் பண்ணை கருவிகள் மற்றும் தீவனங்களை பாதுகாக்க வேண்டும்.

              மேலும் பண்ணையை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சினை மாடுகளின் கொட்டகைத் தரை வழவழப்பாக இல்லாமல் இருக்க வேண்டும்.

              சினை ஊசி போட பயன்படுத்தப்படும் விந்தில் எந்த வித நோய் இல்லாமல் இருக்க வேண்டும்.

              3 முதல் 7 வயதில் தடுப்பூசி போட வேண்டும். நோய்க் கிளர்ச்சியின்போது மாடுகளை இனப்பெருக்கம் செய்வது கூடாது.

கன்று வீச்சு | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை