தற்போது உள்ள சூழ்நிலையில் நேரமின்மை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. அதாவது அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் உதவியாக இருந்து வருகின்றன. அந்த வகையில் கால்நடை பராமரிப்புக்கு விவசாயிகள் சில இயந்திரங்கள் மூலமாக எளிய முறையில் வேலையை செய்து பயன்பெறலாம். அந்த வகையில் பயன்படுத்த வேண்டிய முக்கிய இயந்திரம் பால் கறவை இயந்திரம்.

               மாடுகளில் கறக்கும் கடைசி பாலில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அதிகப்படியான பால் கறக்கும் மாடுகளில் கைகளை பயன்படுத்தும் போது முழுவதையும் கறக்காமல், சிறிதளவு பாலை அப்படியே விட்டுவிடுவோம். பெரிய பால் பண்ணைகளை இயக்கி வருபவர்களுக்கு கைகளால் பால் கறப்பது என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் நிறைய ஆட்களும் போதுமான நேரமும் தேவைப்படும். இதற்கு தீர்வாக பால் கறவை இயந்திரம் செயல்படுகிறது.

அமைப்பு

                கறவை மாடுகளின் மடியில் காயம் எதுவும் ஏற்படாமல் சிறிது நேரத்தில் அதிக பால் கறப்பதற்காக இந்த இயந்திரம் பயன்படுகிறது. பால் கறவை இயந்திரத்தின் ஒரு பகுதியானது மாடுகளின் மடிகளின் காம்பில் பொறுத்தப்பட்டு பாலை சுரக்க செய்து சேகரித்து பாத்திரத்தில் சேர்த்துவிடும். மாடுகளில் பயன்படுத்தப்படும் கருவியின் அளவீடு 352 மி.மீ. அளவும், எருமை மாடுகளுக்கு 400 மி.மீ அளவும் இருக்கும்.

பயன்பாடு

               மாடுகளுக்கும், எருமைகளுக்கும் பால் கறக்க வித்தியாசமான கருவிகள் தேவைப்படும். அதாவது எருமையில் பால் கறக்க அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவைப்படும். ஒவ்வொரு காம்பிலும் பொருத்தப்படும் அனைத்து தொகுப்பின் எடை மற்றும் அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். எனவே பொருத்தப்படும் தொகுப்புகள் எல்லாவற்றிலும் பிடிப்புகளுடன் சரியாகப் பொருந்தியுள்ளதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.

               காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். பால் இயந்திரத்தின் கறக்கும் திறன், அதன் வெற்றிட அளவு மற்றும் துடிப்பு அளவைப் பொறுத்தது. மேலும் இது காம்புகளை மசாஜ் செய்வதால் பால் மற்றும் இரத்தம் ஓரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது. பால் கறவை இயந்திரத்தை பயன்படுத்தி பால் கறப்பதனால் மடிவீக்க நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை

               பால் கறப்பவர்கள் அந்த இயந்திரத்தை பற்றி நன்கு பயிற்சி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும். அதாவது இயந்திரத்தை கையாளும் முறை, அதன் அமைப்பு, பராமரிப்பு, பால் கறத்தல் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இயந்திரத்தை பயன்படுத்தும் வகையில் பண்ணையின் அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். பயன்படுத்தும் மாடு அல்லது எருமைகளின் காம்பு மற்றும் மடிகளில் எவ்வித காயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

                கைகளால் பால் கறந்து பழக்கப்பட்ட மாடுகள் இந்த முறையை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் ஆகலாம். இயந்திரத்தை பயன்படுத்தும் போது அதிலிருந்து வரும் ஒலியினால் கால்நடைகள் பால் கறக்க தவறலாம். இதற்கு சில நாட்களுக்கு மாடுகளுக்கு அருகில் ஒலியுடன் இயந்திரத்தை வைத்துவிட்டு, கைகளால் கறக்க வேண்டும். இதனால் அந்த ஒலிக்கு மாடுகள் பழகிவிடும். பிறகு பால் கறவைக்கு இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

                 மாடுகளை கட்டி வைத்து, அதன் பிறகு இயந்திரத்தை காம்புகளில் பொருத்த வேண்டும். பால் கறப்பவர் இயந்திரத்தை பொருத்திவிட்டு, மாடுகளை கவனிக்க வேண்டும். அதாவது மாடுகள் இயந்திரத்திற்கு பழக்கமாகும் வரை இதை செய்தல் அவசியமானதாகும்.

பால் கறவை இயந்திரம் | அமைப்பு | பயன்பாடு | பயன்படுத்தும் முறை

கருத்துகள் இல்லை