கூரைகள்

               மழை மற்றும் வெயில்களில் இருந்து பாதுகாப்பதற்காக கூரைகள் வேயப்படுகிறது.

               பனைமர ஓலைகள் அல்லது தென்னை மட்டைகளால் கூரை வேயப்படுகின்றன. இவை விலை மலிவானவை, மேலும் வெப்பத்தை குறைவாகக் கடத்துவதால் வெயில் காலத்திலும் கட்டிடங்களை குளிர்ச்சியாக வைக்கின்றன.

               ஓடுகளை கொண்டு கூரை அமைக்கலாம். ஓடுகள் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை. வெப்பத்தை மெதுவாகக் கடத்தும். இதனால் மாடுகளை வெயிலில் இருந்து பாதுகாக்கலாம்.

              அதிகமாக சிமெண்ட் அட்டைகளை கூரைகள் அமைக்க பயன்படுத்தப்படுகின்றன.

              அலுமினிய அட்டைகள் கூரைகள் அமைக்க பயன்படுகின்றன. இது வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடையது. இதனால் வெயில் காலத்திலும் பண்ணை குளிர்ச்சியாக இருக்கும்.

தரைப்பகுதி

               தரை தண்ணீரை உறிஞ்சி கொள்வதாக இருக்கவேண்டும். தரை வழுக்குவதாக இருக்கக் கூடாது. தரை சொரசொரப்பாக இருக்க வேண்டும். சிமெண்ட் கான்கிரீட்டில் தரை அமைப்பது தரமானதாக இருக்கும்.

தீவனத் தொட்டி

               தீவனத்தொட்டி சராசரியாக 2 அடி உயரம் இருக்க வேண்டும். தொட்டியின் உயரம் அதிகமாகவும் இருக்க கூடாது, குறைவாகவும் இருக்க கூடாது. தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும்.

               தீவனத்தொட்டியை செங்கல்லால் அமைத்து சிமெண்ட்டால் பூசிவிடலாம். கருங்கல் பலகைகளை அதன் அடியில் பதிப்பது சிறந்தது. தீவனம் சாப்பிடும் போது மாடுகளின் நாக்கு கருங்கல்லில் உராய்வது நல்லது. இதனால் மாடுகளுக்கு நாவரி நாக்கில் முள் போன்ற அமைப்பு பெரிதாவது வராமல் இயற்கையாக தடுக்கலாம்.

கழிவு நீர் வடிகால்

                  2 அடி அகலமுள்ள கழிவு நீர் வடிகால் சாணி, மற்றும் சிறுநீர் எளிதில் வந்து விழுமாறு சற்று சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் பின் சற்று இடைவெளியுடன் எளிதாக கழிவுகள் வெளியேறுமாறு அமைத்தல் அவசியம்.

கால்நடை பண்ணை அமைத்தல்!

கருத்துகள் இல்லை