தண்ணீர் வடிகால் உள்ள பகுதிகளில் அகத்தி நன்கு வளரும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு 7 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 7 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 7 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இட்டு உழவேண்டும்.
விதை
ஒரு ஹெக்டருக்கு 7.5 கிலோ விதை தேவைப்படும். 200கிராம் சூடோமோனஸை நீரில் கரைத்து விதை நேர்த்தி செய்த பின்னர் விதைக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
விதைத்தவுடன் முதல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3-வது நாள் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 முறை தெளிப்பதன் மூலம் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கலாம்.
அறுவடை
முதல் அறுவடை 8 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்து மாட்டிற்கு கொடுக்கலாம். அதன் பின்பும் ஒவ்வொரு 65-78 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை