மழைக்காலங்களில், மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. இந்நோய் தாக்கிய மாடுகளின் மண்ணீரலில் வீக்கம் ஏற்படும். இதை மண்ணீரல் காய்ச்சல் நோய் என்றும் அழைப்பார்கள். இந்நோயானது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் முக்கியமான நோயாகும்.

               அடைப்பான் நோய் பேசில்லஸ் ஆன்த்ராசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மாடுகளின் உடலில் இருந்து இந்த நோய்க்கிருமிகள் வெளியேறும்போது காற்று பட்டு ஸ்போராக மாறுகின்றன. இந்த ஸ்போர்கள் அதிக வெயில், குளிர் மற்றும் ரசாயனங்கள், வறட்சி ஆகியவற்றைத் தாங்கக்கூடியவை ஆகும்.

               ஆந்த்ராக்ஸ் நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் நீண்ட நாட்கள் வரை மண்ணில் உயிரோடிருக்கும். மேலும் இந்த நோயானது மண் மூலமாகவும் தொடர்ந்து பரவுகிறது.

               ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்நிலைகள், வெள்ளம் போன்ற இயற்கை விளைவுகள் மூலம் பாக்டீரியா ஸ்போர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்கின்றன. பறவை மற்றும் பூச்சிகள் மூலமாகவும் அடைப்பான் நோய் பரவுகிறது.

                நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புத்தூள், உரங்கள், தோல், முடி, தானியங்கள் மற்றும் உலர் தீவனங்கள் போன்றவற்றின் மூலம் நோய் பரவுகிறது.

அறிகுறிகள்

               நோய் பாதிக்கப்பட்ட கால்நடையில் அதிகக் காய்ச்சல், தீவனம் எடுக்காமல் வயிறு உப்பிக் காணப்படுதல், நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அளவுக்கு அதிகமாக சோர்வுடன் காணப்படும். அதிகக் காய்ச்சல் உண்டாகும்.

              மேலும் மூச்சு விட சிரமப்படுதல், நோய் அறிகுறிகள் வெளிப்பட்டு 48 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட மாடுகள் இறந்துவிடும். இறந்த மாடுகளின் இயற்கை துவாரங்களில் இருந்து உறையாத இரத்தம் வடிதல், கழுத்து, கால்களுக்கு இடையிலுள்ள பகுதி, வயிற்று, நெஞ்சுப்பகுதி போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.

               நோய்த்தாக்குதல் தீவரமாக இருக்கும் போது கால்நடைகள் எந்தவொரு நோய் அறிகுறியும் வெளிக்காட்டாமல் இறந்து விடும். இந்நோயால் திடீரென்று வலிப்பு ஏற்பட்டும் இறந்து விடும்.

தடுப்பு முறைகள்

                கால்நடைகளுக்கு அடைப்பான் நோய்க்கெதிரான தடுப்பு ஊசியை போட வேண்டும்.

               இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது பரிசோதனை செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம்.

                எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும். இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும்.

அடைப்பான் நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை