இளங்கன்றுகளை தனியாக பராமரிப்பதற்கு தனியாக கன்று கொட்டகை அமைப்பது அவசியமாகும்.
கன்று கொட்டகையானது பால் கறக்கும் கொட்டகை அல்லது இடத்திற்கு அருகில் அமைக்கவேண்டும்.
இந்த அமைப்பில் கன்றுக் கொட்டகையினை அமைப்பதால் கன்றுகளை அவற்றின் தாய் மாடுகளிடம் எளிதில் அழைத்துச் செல்ல முடியும்.
கன்றுகளுக்கு உலர்வான படுக்கை அமைப்பு, கன்றுகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச காற்றோட்ட அளவு, வறட்சியற்ற சூழ்நிலை போன்றவை கொட்டகைகளில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வடிகால் வசதி மற்றும் காற்றோட்ட வசதி போன்றவற்றால் கன்றுக் கொட்டகையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் குறைக்கப்படும்.
கருத்துகள் இல்லை