தேவையான பொருட்கள் :
* முடக்கத்தான் கீரை1 கட்டு
* வெங்காயம்8
* பச்சை மிளகாய்2
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
* மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை விழுதாக நறுக்கி அதனை அரைத்து கொள்ளவும். முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
காடயில் எண்ணெய் ஊற்றி அரைத்துவைத்த முடக்கத்தான் கீரை விழுது, வெங்காய விழுது இரண்டையும் ஒன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
கலவை வதங்கியபிறகு சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கெட்டிப்படுத்தவும். பின் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும். சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தோசை, இட்லி மற்றும் சாத்திற்கு சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை