தேவையான பொருட்கள் :
* முள்ளங்கி1
* முள்ளங்கி கீரை2 கட்டு
* பருப்பு ஒன்றரை கப்
* பூண்டு பல்4
* தக்காளி1
* மஞ்சள் பொடிகால் டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
அரைக்க:
* தேங்காய் துருவல் - கால் கப்
* சீரகம், சோம்பு - கால் டீஸ்பூன்
* மிளகாய் வற்றல் - 1
தாளிக்க:
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு, உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* பெருங்காயப் பொடி -அரை டீஸ்பூன்
செய்முறை :
முள்ளங்கி மற்றும் கீரையை தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பருப்புடன் மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேக வைக்கவும். சீரகம், சோம்பு, மிளகாய் வற்றல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பருப்பு வெந்ததும் அதில் நறுக்கிய முள்ளங்கி மற்றும் முள்ளங்கி கீரை, நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து விடவும். நன்கு கொதிக்க விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம், பெருங்காயப் பொடி சேர்க்கவும். தாளித்ததை தயாரான கீரை மற்றும் பருப்பில் சேர்க்கவும். சுவையான சத்தான முள்ளங்கி கீரை கூட்டு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை