இது வறட்சியினைத் தாங்கி வளரக்கூடியது. முயல் மசால் ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நன்கு வளரும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு 8 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 7 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 7 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இட்டு உழவேண்டும்.
விதை
ஒரு ஹெக்டருக்கு 6 கிலோ விதையை 30 x 15 செ.மீ என்ற வரிசையில் ஊன்ற வேண்டும்.
நீர் மேலாண்மை
வறட்சியை தாங்கி வளரக் கூடியது. அதனால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.
பயிர் பாதுகாப்பு
அமிர்தகரைசலை தொடர்ந்து அளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் இருக்காது. அதிக மகசூல் கிடைக்கும்.
அறுவடை
விதைத்த 75 நாட்களில் அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை