கர்ப்பகாலம் தொடங்கிய நாள் முதல், பெண்களின் இயல்பு வாழ்வில் பல மாற்றங்கள் உண்டாகத் தொடங்கும். இம்மாற்றங்களை ஒரு பெண் ஏற்றுக் கொண்டு, தன் இயல்பு வாழ்வை மாற்றுவது என்பது கடினமான காரியமே! உணவு முறைகளில் தொடங்கி, உறங்கும் முறைகள் வரை அனைத்திலும் மாற்றங்களை காண்கிறாள் கர்ப்பிணி.
கர்ப்பிணிகளின் அன்றாட செயல்களில், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சாப்பிடுவது, உறங்குவது என பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்பதிப்பில், கர்ப்பகால உறங்கும் முறைகள் பற்றி காணலாம்…!
முதல் 3 மாதகாலம்
கர்ப்பத்தின் போது முதல் 12 வாரம் வரை பெண்களுக்கு அதிகம் பகல் தூக்கம் இருக்கும், ஆனால் இரவுத் தூக்கம் குறைவாக இருக்கும். அடிக்கடி இரவில் கண் விழிப்பார்கள். இக்கால கட்டத்தில், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, முதுகு வலித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இரண்டாவது 3 மாதகாலம்
கர்ப்பத்தின் அடுத்த 13 - 28 வாரகாலம், சற்று இயல்பான உறக்க நிலை இருக்கும். இரவில் கண் விழிப்பது குறைவாக இருக்கும். இக்கால கட்டத்தில், மூக்கடைப்பு, நெஞ்செரிச்சல், குறட்டை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
மூன்றாவது 3 மாதகாலம்
கர்ப்பத்தின் கடைசி 29 வாரம், மீண்டும் பழைய நிலைக்கு மாறத்தொடங்கும், அதாவது, பகல் தூக்கம் அதிகமாகவும், இரவுத் தூக்கம் குறைவாகவும் இருக்கும். இக்கால கட்டத்திலும், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறக்கமின்மை, நெஞ்செரிச்சல், மற்றும் கால் வலி, பிரமைகள், கனவுகள், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை